என் மலர்
உள்ளூர் செய்திகள்

முதுகுளத்தூர் அரசு மருத்துவமனைக்கு விருது
- முதுகுளத்தூர் அரசு மருத்துவமனைக்கு தேசிய தர உறுதி நிர்ணய திட்ட விருது வழங்கப்பட்டது.
- இந்த விருதை அமைச்சர் மா. சுப்பிரமணியன் வழங்கினார்.
முதுகுளத்தூர்
சென்னை ராஜீவ் காந்தி பொது மருத்துவமனை வளாகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் மாவட்ட மருத்துவமனை மற்றும் தாலுகா மருத்துவமனைகளின் தேசிய தர உறுதி நிர்ணய திட்ட விருது வழங்கும் விழா அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் நடந்தது.
இந்த விழாவில் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அரசு மருத்துவமனைக்கு தேசிய தர உறுதி நிர்ணய திட்ட விருதை தலைமை மருத்துவர் நாகரஞ்சித்திடம் அமைச்சர் மா. சுப்பிரமணியன் வழங்கினார். இதையடுத்து முதுகுளத்தூர் அரசு மருத்துவமனை மருத்துவர்கள், மூத்த செவிலியர் சண்முகவள்ளி மற்றும் செவிலியர்கள், பணியாளர்களை பொதுமக்கள் பாராட்டினர்.
Next Story






