என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
புதிய ரேசன் கடைக்கான கட்டிட பணிகள் தொடக்கம்
- ரேசன் கடைகள் கட்டிட பணிகளை எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
- நகர்மன்ற தலைவர் சேது கருணாநிதி தலைமை தாங்கினார்.
பரமக்குடி
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகராட்சியில் உள்ள36 வார்டுகளில் இரண்டுக்கும் மேற்பட்ட வார்டுகளை உள்ளடக்கிய ஒரு ரேசன் கடை இருப்பதால் பொருட்கள் வழங்குவதில் சிக்கல் நீடித்து வருகிறது. மேலும் ரேசன் கடை பகுதியில் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. இதனை தவிர்ப்பதற்காக, பரமக்குடி சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 21, 28 26 ஆகிய வார்டுகளில் புதிய ரேஷன் கடை அமைப்பதற்கான பணிகள் தொடங்கியது.நகர்மன்ற தலைவர் சேது கருணாநிதி தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையாளர் திருமால் செல்வம் முன்னிலை வகித்தார்.
இதில் பரமக்குடி எம்.எல்.ஏ. முருகேசன் பங்கேற்று ரேசன் கடை கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தார். இளநிலை பொறியாளர் சுரேஷ், 28-வது வார்டு கவுன்சிலர் தனலட்சுமி, 30-வது வார்டு கவுன்சிலர் மாரியம்மாள் மும்மூர்த்தி, நகர் மாணவரணி மகேந்திரன், 26-வது கவுன்சிலர் ராதா பூசத்துரை, சோலை செல்லப்பாண்டி, 21-வது வார்டு கவுன்சிலர் பிரபா சாலமன், வார்டு செயலாளர் வாணி குமார், நகர் மீனவரணி அமைப்பாளர் நெடுமாறன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.