search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நரிக்குறவர்களுக்கு விரைவில் இலவச வீட்டுமனை பட்டா
    X

    நரிக்குறவர்களுக்கு விரைவில் இலவச வீட்டுமனை பட்டா

    • நரிக்குறவர்களுக்கு விரைவில் இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்படுகிறது.
    • 3 வேளை உணவும் வழங்கப்பட்டு வருகிறது.

    பரமக்குடி

    பரமக்குடி வைகை நகர், முருகன் கோவில் படித்துறை ஆகிய பகுதிகளில் சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக 23 குடும்பத்தைச் சேர்ந்த நரிக்குறவர்வர்கள் வசித்து வருகின்றனர். பரமக்குடி தாசில்தார் தமிம்ராஜா நரிக்குறவர்கள் வசிக்கும் இடத்திற்கு சென்று ஆய்வு செய்தார்.

    நரிக்குறவர் இன மக்கள் தங்களுக்கு குடும்ப அட்டை, ஆதார் அட்டை, இலவச வீட்டு மனை பட்டா, மாற்றுத்திறனாளிகள், மாதாந்திர முதியோர் உதவித்தொகை, இளைஞர்கள், பெண்களுக்கு தொழில் செய்ய கடனுதவி, புதிதாக குடியிருப்புகள் கட்டித்தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    தகுதியான நபர்களை கண்டறிந்து குடும்ப அட்டை, ஆதார் அட்டை, இலவச வீட்டு மனை பட்டா, மாற்றுத்திறனாளிகள், முதியவர்களுக்கு மாதாந்திர உதவித்தொகை, இளைஞர்கள், பெண்களுக்கு தொழில் செய்ய கடனுதவி, புதிதாக குடியிருப்புகள் கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும் என தாசில்தார் உறுதி அளித்தார். பரமக்குடி அருகே உள்ள பாம்பு விழுந்தான் கிராமத்தில் வருவாய் துறைக்கு சொந்தமான இடத்தில் குடிசைகள் அமைத்து நரிக்குறவர்கள் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு 3 வேளை உணவும் வழங்கப்பட்டு வருகிறது.

    சில தினங்களில் இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட உள்ளது என தாசில்தார் தமிம்ராஜா தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×