என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
இல்லம் தேடி கல்வி மையம் ஆய்வு
- அரசு பள்ளியில் இல்லம் தேடி கல்வி மையத்தை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
- ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலுக்கு வழிபாடு செய்வதற்கு நேற்று இரவு வருகை தந்தார்.
ராமேசுவரம்
தமிழக கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலுக்கு வழிபாடு செய்வதற்கு நேற்று இரவு வருகை தந்தார்.
ராமேசுவரம் வந்த அமைச்சரை தி.மு.க. சார்பில் நகர் மன்ற முன்னாள் கவுன்சிலர் பாஸ்கரன் வரவேற்றார். இன்று அதிகாலை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனுஷ்கோடி கடல் பகுதியில் சிறப்பு பூஜை செய்தார்.
அதனைத் தொடர்ந்து ராமநாதசுவாமி கோவிலில் அமைத்துள்ள 22 புனிதத் தீர்த்தங்களில் நீராடி, பின்னர் ராமநாதசுவாமி- பர்வதவர்த்தினி அம்மன் சன்னதியில் நடந்த சிறப்பு பூஜையில் கலந்து கொண்டு வழிபாடு செய்தார்.
கோவிலுக்கு வந்த அமைச்சரை ராமேசுவரம் நகர் மன்ற தலைவர் மற்றும் தி.மு.க. நகர செயலாளர் நாசர்கான் வரவேற்றார். அதன் பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ராமேசுவரம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு சென்று கல்வித்திறன் மற்றும் பள்ளி கட்டிடம் குறித்து ஆய்வு செய்தார்.
முன்னதாக ராமநாதபுரம் மாவட்டம், மண்டம் ஊராட்சி ஒன்றியம், தங்கச்சிமடம் ஊராட்சியில் உள்ள மெய்யம்புளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, இல்லம் தேடி கல்வி மையத்தை பார்வையிட்டு மாணவ, மாணவிகளின் கல்வித் திறன் குறித்து ஆய்வு செய்தார்.