search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஒவ்வொருவரின் தனிப்பட்ட முயற்சியே வாழ்வில் வெற்றி பெற செய்யும்
    X

    மாணவர்களுக்கு ஸ்மார்ட் வகுப்புக்கான சாதனங்களை டி.ஜி.பி.சைலேந்திர பாபு வழங்கினார். அருகில் கலெக்டர் விஷ்ணுசந்திரன், போலீஸ் எஸ்.பி. தங்கதுரை, தனியார் அமைப்பு நிர்வாக இயக்குநர் சசிநாயர் ஆகியோர் உள்ளனர்.

    ஒவ்வொருவரின் தனிப்பட்ட முயற்சியே வாழ்வில் வெற்றி பெற செய்யும்

    • ஒவ்வொருவரின் தனிப்பட்ட முயற்சியே வாழ்வில் வெற்றி பெற செய்யும் என முன்னாள் டி.ஜி.பி. பேசினார்.
    • ஒரு முயற்சியே கனவாக திட்டமிட்டு செயல்படுத்தினால் கனவை நினைவாக்கலாம்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரத்தில் முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் பிறந்த நாள் விழா அவர் படித்த தனியார் பள்ளியில் நடந்தது. இந்த விழாவில் கலெக்டர் விஷ்ணுசந்திரன், முன்னாள் டி.ஜி.பி. சைலேந்திர பாபு கலந்து கொண்டு தனியார் அமைப்பின் சார்பில் ஏற்படுத்தப்பட்ட கட்டமைப்பு வசதிகளை தொடங்கி வைத்தனர்.

    பின்னர் சைலேந்திர பாபு பேசியதாவது:-

    எண்ணற்ற தமிழர்கள் உலகளவில் சாதனை படைத்து வருகிறார்கள். அதற்குக் காரணம் கல்வி தான். அதிலும் இனிவரும் காலங்களில் அறிவியல் நிறைந்த உலகமாக மாறப்போகின்றன. அந்த அறிவியலை நாம் முழு மையாக கற்றுக் கொள்ள வேண்டும். ஒவ்வொருவருக்கும் இலட்சியம், கனவு, நேரம் இவை மூன்றும் குறிக்கோளாக முன்வைத்து செயல்பட வேண்டும்.

    நேற்றைய சாதனை யாளர்களின் வரலாற்றை எடுத்துப் பார்த்தால் அவர்களின் தனிப்பட்ட முயற்சியே வெற்றிக்கு காரணமாக இருக்கும்.

    அதனால் இன்றைய மாணவர்கள் நாம் ஏழ்மையில் இருக்கிநோம். அதனால் சாதிக்க முடியாது என்று எண்ணக்கூடாது.

    முயற்சி தான் ஒவ்வொருவருக்கும் வெற்றி. ஏழை மீண்டும் ஏழையாக வர முடியாது. ஆனால் முயற்சித்தால் வசதி படைத்தவர்களாக மாறிவிட முடியும். அதற்கு தேவை முயற்சி அந்த ஒரு முயற்சியே கனவாக திட்டமிட்டு செயல்படுத்தினால் கனவை நினைவாக்கலாம்.

    ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் சாதனையாளர்கள்தான்.அதை சரித்திரமாக்குவது தான் உங்கள் லட்சியமாக இருக்க வேண்டும். இன்றைய நாள் நமது லட்சியத்திற்கு ஏற்ற நாள் என உணர்ந்து செயல்பட்டு ஒவ்வொரு வரும் உயர்ந்த இடத்திற்கு செல்ல வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை, எக்ஸ்போரியா குலோப் ஆப் கம்பெனி நிர்வாக இயக்குனர்கள் சசிநாயர், நாகா, சுவார்ட்ஸ் மேல்நிலைப்பள்ளி தாளாளர் ஜோசப் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×