search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அதிக திறன் டிரான்ஸ்பார்மர் அமைக்க சட்டமன்ற பொது நிறுவனக்குழு பரிந்துரை
    X

    பட்டணம்காத்தான் துணை மின் நிலையத்தில் ஆய்வு செய்த சட்டமன்ற பொது நிறுவன குழுவினர்.

    அதிக திறன் டிரான்ஸ்பார்மர் அமைக்க சட்டமன்ற பொது நிறுவனக்குழு பரிந்துரை

    • பட்டணம்காத்தான் துணை மின் நிலையத்தில் அதிக திறன் டிரான்ஸ்பார்மர் அமைக்க சட்டமன்ற பொது நிறுவனக்குழு பரிந்துரைந்துள்ளது.
    • 2021-23ம் ஆண்டிற்கான பொது நிறுவனங்களில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழுத் தலைவர் ராஜா தலைமையில் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ், குழு உறுப்பினர்கள் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. (பூந்தமல்லி), தமிழரசி எம்.எல்.ஏ (மானாமதுரை) நாகைமாலி எம்.எல்.ஏ (கீழ்வேளுர்), பாலாஜி எம்.எல்.ஏ (திருப்போரூர்) ஆகியோர் முன்னிலையில் 2021-23ம் ஆண்டிற்கான பொது நிறுவனங்களில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது. பொது நிறுவன குழு தலைவர் ராஜா தலைமை வகித்தார்.

    வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில், முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளி உதவித்தொகை, மூன்று சக்கர நாற்காலி, மடக்கு சக்கர நாற்காலி, திறன்பேசி, மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் என 15 பயனாளிகளுக்கு ரூ.1,70,888 லட்சம் மதிப்பீட்டிலான நிவாரண தொகைக்கான ஆணைகளையும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் 6 பயனாளிகளுக்கு ரூ.30,108 மதிப்பீட்டிலான இலவச தையல் எந்திரங்களையும், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் 4 பயனாளிகளுக்கு ரூ.28,000 மதிப்பீட்டிலான இலவச தையல் எந்திரங்களையும், வாழ்ந்து காட்டுவோம் திட்டம் மூலம் 5 பயனாளிகளுக்கு இணை மானிய திட்டம் மானியம் ரூ.13,58,589 மதிப்பீட்டிலும், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு கழகம் மூலம் 2 பயனாளிகளுக்கு ரூ.2,25,000 மதிப்பீட்டிலும், இளைஞர்களுக்கான சுய வேலை வாய்ப்பு திட்டம் மூலம் 3 பயனாளிகளுக்கு என மொத்தம் 35 பயனா ளிகளுக்கு ரூ.19.74 லட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொது நிறுவனங்கள் குழு தலைவர் ராஜா வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன், மாவட்ட வன உயிரின காப்பாளர் பகான் ஜக்தீஷ் சுதாகர், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொது நிறுவன குழு இணைச் செயலாளர் பாண்டியன், சார்பு செயலாளர் இந்திரா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சேக் மன்சூர் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக வாலாந்த ரவை ஊராட்சியில் கோரமண்டல் மின் ஆலை யினை பார்வையிட்டு உற்பத்தி திறன் மற்றும் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டு வருவதை பொது நிறுவன குழுவினர் பார்வையிட்டனர்.

    அதனைத்தொடர்ந்து களிமண்குண்டு ஊராட்சியில் கடற்கரை ஓரமாக மரக்கன்றுகள் நடும் பணியினை தொடங்கி வைத்தனர். பின்னர் ராமநாதபுரம் பட்டணம்காத்தான் பகுதி யில் உள்ள மின்வாரிய துணை மின் நிலையத்தை பார்வையிட்டு கூடுதல் கொள்ளளவு திறன் மின்மாற்றிகள் அமைக்க அறிவுறுத்தினர்.

    Next Story
    ×