என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![மொகரம் பிறை அறிவிப்பு மொகரம் பிறை அறிவிப்பு](https://media.maalaimalar.com/h-upload/2023/07/21/1919191-6.webp)
மொகரம் பிறை அறிவிப்பு
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- மொகரம் பிறை அறிவிக்கப்பட்டது.
- மொகரம் பிறை 9 மற்றும் 10 ல் நோன்பு நோற்பது சுன்னத்தாக இருக்கிறது.
ராமநாதபுரம்
தமிழ்நாடு அரசு தலைமை காஜியாரின் அறிவிப்பின் படி ராமநாதபுரம் மாவட்ட அரசு காஜி சலாஹூத்தீன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஹிஜ்ரி 1444 துல்ஹஜ் பிறை 29, கடந்த 18-ந்தேதி மாலை ஹிஜ்ரி 1445 மொகரம் பிறை தென்படாத தால் நேற்று (20-ந்தேதி)மொகரம் மாத முதல் பிறை என்று ஷரீஅத் முறைப்படி நிச்சயிக்கப்பட்டி ருக்கிறது. எனவே 29-07-2023 ம் தேதி சனிக்கிழமை அன்று ஆஷுரா தினமாக கொண்டாடப்படும் என்பது தெரியப்படுத்தப்படுகிறது.
ரஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆஷுரா நாளன்று தானும் நோன்பு நோற்று ஸஹா பாக்களையும் நோன்பு நோற்க ஏவியுள்ளார்கள். மற்றும் அடுத்த ஆண்டு (தான் ஜீவித்திருந்தால்) மொகரம் பிறை 9 அன்றும் நிச்சயமாக நோன்பு நோற் பேன் என்பதாக கூறிய நபி மொழி ஸஹீஹ் முஸ்லிம் ஷரீஃபில் பதிவு செய்யப்பட்டிருப்பதால் முஸ்லிம் ஜமாஅத்தார் களாகிய நாமும் மொகரம் பிறை 9 மற்றும் 10 ல் நோன்பு நோற்பது சுன்னத்தாக இருக்கிறது. எனவே மேற்கூறப்பட்ட நாட்களில் நோற்று அதன் மகிமையை பெற்றுக் கொள்ளுமாறு ஜமாஅத்தார் கள் அனைவரும் அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகி றார்கள்.
இவ்வாறு அவர் தெரி வித்துள்ளார்.