search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அணு ஆராய்ச்சி விழிப்புணர்வு நிகழ்ச்சி
    X

    அணு ஆராய்ச்சி விழிப்புணர்வு நிகழ்ச்சி

    • அணு ஆராய்ச்சி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
    • ராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு கல்லூரிகளின் மாணவிகள் கலந்து கொண்டனர்.

    கீழக்கரை

    கீழக்கரை தாசிம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரி மாணவிகள் முன்னேற்ற சங்கம் மற்றும் அறிவியல் துறையினரும், கல்பாக்கத்தில் உள்ள இந்திரா காந்தி தானியங்கி ஆராய்ச்சி மையமும் இணைந்து ''தேசத்தின் சேவையில் அணுக்கள்'' என்ற தலைப்பில் அணு ஆராய்ச்சி விழிப்புணர்வு நிகழ்ச்சி முதல்வர் சுமையா தலைமையில் நடந்தது. கல்லூரியின் ஆராய்ச்சி மற்றும் வேதியியல் துறைத்தலைவர் பவ்யா வரவேற்றார்.

    கல்லூரியின் ஆராய்ச்சி இயக்குநர் இர்பான் அஹமது வாழ்த்துரை வழங்கினார். ராமேசுவரம் அப்துல் கலாம் சர்வதேச கழக நிர்வாகி நஜுமா மரைக்காயர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். விஞ்ஞானி, மற்றும் மறு செயலாக்கக் குழு இந்திரா காந்தி தானியங்கி ஆராய்ச்சி மைய இயக்குநர், கல்பாக்கம் அனந்தசிவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். கல்லூரி வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அறிவியல் கண்காட்சியையும் அவர் தொடங்கி வைத்தார். மரக்கன்றுகள் நடப்பட்டன. ஓவியம் வரைதல், ஸ்லோகன் எழுதுதல் மற்றும் பேச்சுப் போட்டிகளில் ராமநாதபுர மாவட்டத்தின் பல்வேறு கல்லூரிகளின் மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த போட்டிகளில் நடுவர்களாக இந்திரா காந்தி தானியங்கி ஆராய்ச்சி மையத்தின் பயிற்சிப்பிரிவு தலைவர், மதுரை மீனாட்சி மற்றும் ஆர்.டி.எஸ், தலைவர் அன்னலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    கீழ்க்கரை பேர்ல் மெட்ரிக், ஹமீதியா மெட்ரிக், மஹ்தூமியா மெட்ரிக், ஏர்வாடி எலைட் மெட்ரிக் சிக்கல் இந்தியன் மெட்ரிக் ஆகிய பள்ளிகளின் மாணவ-மாணவிகள் அறிவியல் கண்காட்சியைக் கண்டு களித்தனர். இதற்கான ஏற்பாடுகளை சீதக்காதி அறக்கட்டளையின் துணைப் பொது மேலாளர் சேக் தாவூத் கான் மற்றும் அறிவியல் துறைப் பேராசிரியர்கள் செய்திருந்தனர்.

    Next Story
    ×