search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ராமநாதபுரம் கோர்ட்டு வளாகத்தில் நிரந்தரமாக போலீஸ் பாதுகாப்பு
    X

    ராமநாதபுரம் கோர்ட்டு வளாகத்தில் நிரந்தரமாக போலீஸ் பாதுகாப்பு

    • ராமநாதபுரம் கோர்ட்டு வளாகத்தில் நிரந்தரமாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
    • அனைவரையும் சோதனை செய்த பிறகே போலீசார் அனுமதித்தனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாஜிஸ்தி ரேட்டு கோர்ட்டில் கடந்த 3-ந் தேதி அசோக் குமார் என்ற ரவுடி வழக்கு ஒன்றில் நிபந்தனை ஜாமீனில் கையெழுத்திட்ட போது மாஜிஸ்திரேட்டு இருக்கை முன்பு அவரை கொக்கிகுமார் என்ற மற்றொரு ரவுடி சரமாரியாக வெட்டி விட்டு தப்பினான்.

    மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் போலீசார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு ரவுடி கொக்கிகுமாரை துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். கோர்ட்டு அறையில் நடந்த இந்த தாக்குதல் சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர்.

    போலீஸ் கண்காணிப்பு சரியாக இல்லாததே இந்த சம்பவத்திற்கு காரணம் என்று குற்றம் சாட்டினர். இதை தொடர்ந்து ராமநாதபுரம் கோர்ட்டு வளாகத்தில் நேற்று முதல் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இன்ஸ்பெக்டர் தலைமை யில் 10-க்கும் மேற்பட்ட போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    கோர்ட்டின் இரண்டு பக்க நுழைவு வாயில்களிலும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் கோர்ட்டுக்கு வரும் வக்கீல்கள், வழக்கு தொடர்பாக வருபவர்கள் என அனைவரையும் சோதனை செய்த பிறகே போலீசார் அனுமதித்தனர்.

    மேலும் மெட்டல் டிடெக்டர் மூலம் ஆயு தங்கள் உள்ளிட்டவைகள் கொண்டு செல்லப்படு கிறதா? எனவும் போலீசார் தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர். இந்த போலீஸ் கண்காணிப்பு நிரந்தரமாக மேற்கொள்ளப் படும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

    இந்நிலையில் கோர்ட்டில் புகுந்து வாலிபரை வெட்டிய ரவுடி கொக்கி குமாருக்கு ஆதர வாக யாரும் ஆஜராக மாட்டோம் என்று ராமநாதபுரம் மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இதுகுறித்து ராமநாதபுரம் வழக்கறிஞர் சங்க தலைவர் சேக் இப்ராகீம், செயலாளர் கருணாகரன், பொருளாளர் பாபு ஆகியோர் கூறியதாவது:-

    ராமநாதபுரம் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திற்குள் அமைந்துள்ள நீதித்துறை நடுவர் எண்.2 நீதிமன்றத்தில், ஒரு குற்ற வழக்கில் ஆஜராக வந்த அசோக்குமார் என்பவரை, ராமநாதபுரம் ஆர்.எஸ்.மடையைச் சேர்ந்த ரவுடி கொக்கி குமார், நீதிமன்றத்திற்குள் அத்துமீறி நுழைந்து வாளால் வெட்டியுள்ளார். பின்னர் சர்வ சாதாரணமாக நீதிமன்ற வளாகத்திற்குள் நடந்து சென்று தப்பித்து ள்ளார். அவருடைய இந்த மனிதாபிமானமற்ற குற்றச்செயலை ராமநாதபுரம் வழக்கறிஞர் சங்கம் மிகவும் கடுமையாக ஆட்சேபனை செய்கிறது. இக்குற்ற வழக்கு சம்பந்தமாக அவருக்கு ஆதரவாக ராமநாதபுரம் மாவட்ட வழக்கறிஞர் சங்கத்தின் வழக்கறிஞர்கள் யாரும் ஆஜர் ஆவதில்லை என ஏக மனதாக முடிவு செய்யப்பட்டு தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    Next Story
    ×