என் மலர்
உள்ளூர் செய்திகள்
திட்டப்பணிகளை தாமதமின்றி முடிக்க வேண்டும்
- திட்டப்பணிகளை தாமதமின்றி முடிக்க வேண்டும் என்று ஊராட்சித்துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
- குடிநீர் திட்ட பணிகளுக்கு சிறப்பு கவனம் எடுத்து பொதுமக்களின் தேவைக்கேற்ப பணிகளை முடிக்க வேண்டும்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் முன்னிலையில், ஊரக வளர்ச்சி, ஊராட்சித்துறை ஆணையர் தாரேஸ் அகமது தலைமையில் நடந்தது.
கடந்த நிதியாண்டு மற்றும் நடப்பு நிதியாண்டில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து ஆணையர் ஆய்வு செய்தார். இதில் அவர் பேசியதாவது:-
ஊரக வளர்ச்சித்து றையின் மூலம் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் புதிய அங்கன்வாடி மையம் கட்டிடம் கட்டுதல், அங்கன்வாடி கட்டிடம் சீரமைக்கும் பணி, பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் நிதியின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள், அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் 15-வது நிதி குழுவில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள், சமத்துவபுரம் வீடுகளை சீரமைக்கும் பணிகள், ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. குடிநீர் திட்ட பணிகளுக்கு சிறப்பு கவனம் எடுத்து பொதுமக்களின் தேவைக்கேற்ப பணிகளை முடிக்க வேண்டும்.
அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் மற்றும் பிரதமரின் குடியிருப்பு திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் பணிகளை பயனாளிகளுக்கு காலதாமதமின்றி கட்டுமான பொருட்களை வழங்க வேண்டும்.
ஒவ்வொரு நிதியாண்டி லும் மேற்கொள்ளப்பட தேர்வு செய்யப்பட்ட பணிக ளுக்கான ஆணைகளை காலதாமதமின்றி பயனா ளிகளுக்கு வழங்கி பணிகளை திட்டமிட்ட காலத்திற்குள் முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக மண்டபம் ஊராட்சி ஒன்றிய அலுவ லகம் மற்றும் மண்டபம் ஊராட்சி அலுவலகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்த பதிவேடுகளை ஆணையர் பார்வையிட்டார். பின்னர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள உதவி இயக்குநர் ஊராட்சிகள் அலுவலகம், மாவட்ட ஊராட்சி அலுவலகம் ஆகியவற்றை பார்வையிட்டு திட்டப்பணிகள் ஊராட்சிகளுக்கு உரிய காலத்தில் அனுமதி வழங்கப்படுகிறதா? என்று ஆய்வு செய்து காலதா மதமின்றி பணிகளை வழங்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இதில் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) பிரவீன் குமார், உதவி கலெக்டர் (பயிற்சி) நாராயண சர்மா, ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் சுந்தரேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.