என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
அபிராமம் வார சந்தையில் எடை மோசடி
- அபிராமம் வாரச் சந்தையில் எடை மோசடி நடைபெறுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
- சரியான எடை அளவுடன் விற்பனை செய்ய தொழிலாளர் நலத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அபிராமம்
ராமநாதபுரம் மாவட்டம் அபிராமத்திற்கு உட்பட்ட காடனேரி, நத்தம், அச்சங்குளம், அகத்தாரிருப்பு உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. அபிராமத்தில் திங்கட்கிழமை வாரச்சந்தை கூடுகிறது.
இங்கு பொருட்கள் வாங்கும் பொதுமக்களிடம் வியாபாரிகள் தராசில் இரும்பு எடை கற்களால் எடை போடுகின்றனர். இதில் எடை குறைவாக உள்ளதால் பொதுமக்கள் ஏமாற்றப்படுகின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், காய்கறிகளை அள்ளி போட்டு ஒரு பக்க தராசு தட்டு தரையை தொடும் அளவிற்கு செய்கின்றனர்.வீட்டில் எடை போட்டால் குறைகிறது.
எங்களை வியாபாரிகள் நூதன முறையில் ஏமாற்றுகின்றனர். வசதி உள்ளவர்கள் சூப்பர் மார்க்கெட்டுகளில் வாங்குகிறார்கள். நாங்களோ நம்பி இருப்பது வாரச்சந்தையை தான். சரியான எடை அளவுடன் விற்பனை செய்ய தொழிலாளர் நலத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எடை கற்கள் மற்றும் எலக்ட்ரானிக் தராசுகளை பயன்படுத்துபவர்கள் தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் முத்திரையிட்டு அனுமதி பெற வேண்டும்.
இதை பெரும்பாலான விற்பனையாளர்கள் பின்பற்றுவதில்லை. இதையும் முறையாக கண்காணிக்க வேண்டும் என்றனர்.