என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு எழுத்து தேர்வு
- ராமநாதபுரம் மாவட்டத்தில் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு எழுத்து தேர்வு வருகிற 25-ந்தேதி நடக்கிறது.
- தேர்வு மையத்திற்கு வரும் விண்ணப்பதாரர்கள் புகைப்படத்துடன் கூடிய அழைப்புக்கடிதத்துடன் வர வேண்டும்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ராமநாதபுரம் செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரி, கீழக்கரை முகம்மது சதக் பொறியியல் கல்லூரி, கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கீழக்கரை தாசிம்பீவி அப்துல்காதர் பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பரமக்குடி ஆயிர வைஸ்யா மேல்நிலைப் பள்ளி, ராமநாதபுரம் வாணி வேலுமாணிக்கம் மான்டிசோரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, ராமநாதபுரம் செய்யதுஅம்மாள் மேல்நிலைப் பள்ளி, ஆகிய 7 கல்லூரி மற்றும் பள்ளிகளில் 2022-ம் ஆண்டிற்கான சப்-இன்ஸ்பெக்டர் (ஆண் மற்றும் பெண்) பணிக்கு 5,942 விண்ணப்பதாரர்களுக்கு வருகிற 25-ந் தேதி (சனிக்கிழமை) மெயின் எழுத்துத் தேர்வு காலை 10மணி முதல் 12.30 வரையும், தமிழ் தகுதித் தேர்வு பிற்பகல் 3.30 மணி முதல் 5.10 மணி வரையும் நடைபெற உள்ளது.
தேர்வு மையத்திற்கு வரும் விண்ணப்பதாரர்கள் புகைப்படத்துடன் கூடிய அழைப்புக்கடிதத்துடன் வர வேண்டும். அழைப்புக்கடிதத்தில் புகைப்படம் இல்லாமலோ அல்லது தெளிவாக இல்லாமலோ இருந்தால் தற்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை ஒட்டி அரசிதழ் பதிவு பெற்ற அலுவலரிடம் கையொப்பம் பெற்று கொண்டு வரவேண்டும்.
அரசால் வழங்கப்பட்டுள்ள புகைப்படத்துடன் கூடிய அடையாளச் சான்று (ஆதார் அட்டை அல்லது வாக்காளர் அட்டை அல்லது ஓட்டுநர் உரிமம் அல்லது மற்றும் பிற) கொண்டு வரவேண்டும். எழுத்துத் தேர்வில் கலந்து கொள்ள வரும் விண்ணப்பதாரர்கள் சரியாக காலை 8.30 மணி முதல் 9.30 மணிக்குள் தேர்வு மையத்தில் ஆஜராக வேண்டும்.
எந்த காரணத்தை கொண்டும் காலதாமதாக வரும் விண்ணப்பதாரர்கள் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப் படமாட்டார்கள். விண்ணப்பதாரர்கள் தேர்வு மையத்திற்கு செல்போன், ஸ்மார்ட் வாட்ச், புளுடூத், கால்குலேட்டர் போன்ற மின்னனு சாதனங்கள் கொண்டுவர கண்டிப்பாக அனுமதி இல்லை.
விண்ணப்பதாரர்கள் தேர்வுக்கு வரும்பொழுது அழைப்புக்கடிதம், நீலம் அல்லது கருப்பு நிற பந்துமுனை ஆகியவற்றை தவிர வேறு ஏதும் கொண்டுவர கட்டாயமாக அனுமதி கிடையாது.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்