என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
வீட்டை அபகரித்து பொருட்களை திருடியதாக 23 பேர்மீது வழக்கு
- வீட்டு மனை பட்டாவை ரத்து செய்யக்கோரி நீதிமன்றத்தில் மனுதாரர் சக பாலசுந்தரம் வழக்கு தொடர்ந்துள்ளார்.
- இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்பவருக்கும் வீட்டு பிரச்சினை தொடர்பாக தகராறு உள்ளது.
தாரமங்கலம்:
தாரமங்கலம் 18-வது வார்டு அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் பாலசுந்தரம். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்பவருக்கும் வீட்டு பிரச்சினை தொடர்பாக தகராறு உள்ளது. வீட்டு மனை பட்டாவை ரத்து
செய்யக்கோரி நீதிமன்றத்தில் மனுதாரர் சக பாலசுந்தரம் வழக்கு தொடர்ந்துள்ளார் .
இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் ஆறுமுகம் தரப்பை சேர்ந்தவர்கள் பிரச்சினைக்கு உரிய வீட்டின் கதவை உடைத்து வீட்டில் இருந்த வீட்டு உபயோக பொருட்களை திருடி சென்று விட்டதாக பாலசுந்தரம் தாரமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
புகாரின் பேரில் ஆறுமு கம், லோகேஸ்வரன், தில்லை நாயகம், கோவிந்தராஜ், சக்தி வேல், கோகுல்ராஜ், பூபாலன், கணேசன், பிரபு, அருள்காந்தி, இளவரசன், செந்தில், சதீஷ்குமார் உள்பட 23 பேர் மீது இன்ஸ்பெக்டர் தொல்காப்பியன், சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தன் ஆகியோர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.