என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
சிறப்பு பஸ் இயக்க மறுப்பு; டிரைவர், கண்டக்டருக்கு விளக்கம் கேட்டு நோட்டீசு
- அரசு பஸ் ஒன்று மேட்டூரில் இருந்து சேலத்துக்கு இருமுறையும், ெதாடர்ந்து சேலத்தில் இருந்து விழுப்புரத்துக்கு ஒரு முறையும் இயக்கப்படுகிறது.
- தினமும் 700 கி.மீட்டர் பஸ் இயங்கும் நிலையில் கூடுதலாக 210 கி.மீட்டர் இயக்க நிர்பந்தம் செய்கின்ற–னர். ஒரே டிரைவர் இந்த அளவு இயக்க இயலாது.
சேலம்:
சேலம் கோட்ட அரசு போக்குவரத்து கழகம் சார்பில் அரசு பஸ் ஒன்று மேட்டூரில் இருந்து சேலத்துக்கு இருமுறையும், ெதாடர்ந்து சேலத்தில் இருந்து விழுப்புரத்துக்கு ஒரு முறையும் இயக்கப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த 12-ந்தேதி மேட்டூரில் இருந்து சேலம் புதிய பஸ் நிலையத்துக்கு அந்த பஸ் வந்தது. அந்த பஸ்சில் டிரைவர் மதியழகன், கண்டக்டர் குமார் ஆகியோர் பணியில் இருந்தனர். கண்டக்டர் குமார், புதிய பஸ் நிலைய கண்காணிப்பாளர் அறையில், விழுப்புரம் செல்ல நேரம் குறிப்பிட சென்றபோது, அங்கிருந்த உதவி மேலாளர் கணேஷ்குமார், சென்னைக்கு சிறப்பு பஸ்சாக இயக்க அறிவுறுத்தினார்.
அதற்கு டிரைவர், கண்டக்டர் மறுத்துவிட்டனர். இதனால் இருவருக்கும் விளக்கம் கேட்டு, நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இது குறித்து டிரைவர், கண்டக்டர் கூறியதாவது-
தினமும் 700 கி.மீட்டர் பஸ் இயங்கும் நிலையில் கூடுதலாக 210 கி.மீட்டர் இயக்க நிர்பந்தம் செய்கின்ற–னர். ஒரே டிரைவர் இந்த அளவு இயக்க இயலாது. மீறி இயக்கினால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் பஸ்சை இயக்க மறுத்த நிலையில் மெமோ கொடுக்கப்பட்டுள்ளது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எனவே கோட்ட அதிகாரிகள் எங்கள் மீதான நடவடிக்கைையை கைவிட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.