என் மலர்
உள்ளூர் செய்திகள்

ராசிபுரம் அருகே தனியார் தொழிற்சாலை ஆக்கிரமிப்பு செய்த நிலங்களை ஜேசிபி எந்திரம் மூலம் அகற்றப்பட்ட போது எடுத்த படம்.
தனியார் தொழிற்சாலையின் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
- ராசிபுரம் தாலுகா நாமகிரிப்பேட்டை அருகே உள்ள மங்களபுரம் பகுதியில் தனியார் குளுக்கோஸ் தொழிற்சாலை கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது.
- இந்த பலவிதமான நோய்கள் ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் எனவே தொழிற்சாலையை நிரந்தரமாக மூடவேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்தும் போராட்டங்களை நடத்தியும் வந்தனர்.
ராசிபுரம்:
ராசிபுரம் தாலுகா நாமகிரிப்பேட்டை அருகே உள்ள மங்களபுரம் பகுதியில் தனியார் குளுக்கோஸ் தொழிற்சாலை கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது.
இந்த ஆலையின் கழிவுநீர் வெளியேற்றத்தால் மங்களபுரம் உள்பட 5-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீர் மாசுபட்டு இருப்பதாகவும், மேலும் பலவிதமான நோய்கள் ஏற்பட்டு மக்கள்
பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் எனவே தொழிற்சாலையை நிரந்தரமாக மூடவேண்டும் என அப்பகுதி
யைச் சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை வைத்தும் போராட்டங்களை நடத்தியும் வந்தனர்.
இந்த தொழிற்சாலை நிர்வாகத்தினர் கோவில் நிலம், மற்றும் புறம்போக்கு நிலங்களையும், நீர்நிலை
களையும் ஆக்கிரமித்து இருப்ப
தாகவும் பொதுமக்கள் புகார் அளித்தனர். அதன் பேரில் நாமக்கல் கலெக்டர் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டார்.
இதையொட்டி நேற்று வருவாய் துறையினர் மற்றும் போலீசார் சேர்ந்து தனியார் தொழிற்சாலை ஆக்கிரமிப்பு செய்திருந்த அரசு புறம்போக்கு நிலத்தை
யும், கோவில் நிலத்தையும்,
கழிவு நீர் குழாய்களையும் கட்டப்பட்ட கட்டிடங்க ளையும் ஜேசிபி எந்திரம் மூலம் அகற்றினர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.






