என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![மணிமுத்தாறு பாலத்தில் உள்ள நடைபாதை கடைகள் அகற்றம்:விருத்தாசலம் நகராட்சி அதிரடி மணிமுத்தாறு பாலத்தில் உள்ள நடைபாதை கடைகள் அகற்றம்:விருத்தாசலம் நகராட்சி அதிரடி](https://media.maalaimalar.com/h-upload/2023/12/01/1989230-akkiramippu.webp)
X
பாலத்தின் மீதுள்ள நடைபாதை கடைகளை விருத்தாசலம் நகராட்சி ஊழியர்கள் அகற்றுவதை படத்தில் காணலாம்.
மணிமுத்தாறு பாலத்தில் உள்ள நடைபாதை கடைகள் அகற்றம்:விருத்தாசலம் நகராட்சி அதிரடி
By
மாலை மலர்1 Dec 2023 12:36 PM IST
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளதாக விருத்தாசலம் நகராட்சிக்கு பல்வேறு புகார்கள் வந்தன.
- பொருட்கள் அனைத்தையும் லாரியில் ஏற்றி விருத்தாசலம் நகராட்சி அலுவலகத்தில் வைத்தனர்.
கடலூர்:
விருத்தாசலத்தில் உள்ள மணிமுத்தாறு பாலத்தின் நடைபாதையில் ஆக்கிரமித்து 30-க்கும் மேற்பட்டோர் கடைகள் வைத்திருந்தனர். இக்கடைகள் பாலத்தின் மீது நடந்து செல்லும் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளதாக விருத்தாசலம் நகராட்சிக்கு பல்வேறு புகார்கள் வந்தன. இந்நிலையில் இன்று காலை அங்கு வந்த நகராட்சி ஊழியர்கள் அங்கிருந்த பழக்கடை, காய்கறி கடை மற்றும் பேன்சி கடைகளை அகற்றினர். மேலும், பொருட்கள் அனைத்தையும் லாரியில் ஏற்றி விருத்தாசலம் நகராட்சி அலுவலகத்தில் வைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story
×
X