என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
சோழசிராமணி வெள்ள நீர் ஊருக்குள் புகாமல் தடுக்க கோரிக்கை
- காவிரி ஆற்றின் குறுக்கே கடந்த 2006 -ம் ஆண்டு நீர்மின்நிலையம் மற்றும் பெரிய வாகனங்கள் சென்று வரும் அளவிற்கு பாலம் கட்டும் பணி தொடங்கப்பட்டது.
- இந்நிலையில் பாலம் கட்டப்பட்டு சுமார் 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா சோழசிராமணி, ஈரோடு மாவட்டம் பாசூர் இடையே காவிரி ஆற்றின் குறுக்கே கடந்த 2006 -ம் ஆண்டு நீர்மின்நிலையம் மற்றும் பெரிய வாகனங்கள் சென்று வரும் அளவிற்கு பாலம் கட்டும் பணி தொடங்கப்பட்டது. அப்போது காவிரி ஆற்றுக்குள் இருந்த பாறை களை உடைத்து காவிரி ஆற்றுக்குள் மழை போல் குவியல் குவியலாக போட்டனர்.
இந்நிலையில் பாலம் கட்டப்பட்டு சுமார் 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் காவிரி ஆற்றுக்குள் மலை போல் குவிந்து கிடக்கும் கற்களை அகற்றாமல் அப்படியே வைத்துள்ளனர்.
இந்த கருங்கற்கள் மலை போல் குவிந்து கிடப்பதால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கெடுத்து வரும்போது தண்ணீர் காவிரி ஆற்றில் வேகமாக செல்ல முடியாமல் சோழசிராமணி காவிரி கரையோரம் உள்ள வீடுகள் மற்றும் விவசாய நிலங்களுக்குள் புகுந்து விடுகிறது. இதனால் பொதுமக்கள் பாதிப்படைகின்றனர்.
எனவே பொதுப்ப ணித்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து காவிரி ஆற்றுக்குள் மலை போல் குவிந்து கிடக்கும் கருங்கற்களை ஏலம் விட்டு அகற்ற வேண்டும் என சோழசிராமணி பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.