search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கபிலர்மலை பகுதிகளில் தொடர் மின்தடையால் பொதுமக்கள் அவதி
    X

    கபிலர்மலை பகுதிகளில் தொடர் மின்தடையால் பொதுமக்கள் அவதி

    • நேற்று மாலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை கபிலர்மலை துணை மின் நிலையத்திலிருந்து மின்சாரம் விநியோகிக்கப்படும் பகுதிகளுக்கு மின்தடை ஏற்பட்டது.
    • வீடுகளில் மின்சாரம் இல்லாததால் பொதுமக்கள் கொசு கடியால் தூங்க முடியாமல் அவதிப்பட்டனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கபிலர்மலை துணை மின் நிலையத்திலிருந்து கபிலர்மலை சுற்றுவட்டார பகுதிகளான கபிலர்மலை, கபிலக்குறிச்சி, பள்ளக்காடு, பெரிய சோளிபாளையம், சின்ன சோளி பாளையம், பாகம் பாளையம், ஆனங்கூர், அய்யம்பாளை யம், அண்ணா நகர், பொன்மலர் பாளையம், சேளூர், செல்லப்பம்பாளை யம், குன்னத்தூர், பாண்ட மங்கலம், பொத்தனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதி களுக்கு மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் நேற்று மாலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை கபிலர்மலை துணை மின் நிலையத்திலிருந்து மின்சாரம் விநியோகிக்கப்படும் பகுதிகளுக்கு மின்தடை ஏற்பட்டது. வீடுகளில் மின்சாரம் இல்லாததால் பொதுமக்கள் கொசு கடியால் தூங்க முடியாமல் அவதிப்பட்டனர்.

    கபிலர்மலை துணைமின் நிலையத்திலிருந்து மின்சாரம் விநியோகம் செய்யப்படும் பகுதிகளில் மின்தடை ஏற்படுவது தொடர்கதையாக நடந்து வருகிறது.

    கடந்த 3 நாட்களுக்கு முன்பு இரவில் 8 மணி நேரம் மின்தடை ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. மின்வாரிய அதிகாரிகள் இதுகுறித்து எந்த நட வடிக்கையும் எடுக்கவில்லை. தினமும், மின்தடை ஏற்படுவதால் இப்பகுதி மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

    இதுகுறித்து மின்வாரிய அதிகாரியிடம் கேட்டால், மின் கம்பி செல்லும் வழியில் தென்னை மரங்கள் இருப்பதால், அடிக்கடி தென்னை மட்டை கம்பி களில் விழுந்து மின்தடை ஏற்படுகிறது. உயர் அழுத்த மின்சாரம் திடீரென வரும்போது பல பகுதிகளில் கம்பி அறுந்து விழுந்து விடுகிறது என்றார்.

    கடந்த சில ஆண்டுகளாக தினசரி மின்தடை என்பது வாடிக்கையாகி விட்டது. தென்னை மரம் வழியாக செல்லும் மின் கம்பிகளை மாற்றி, அதற்கு பதிலாக தரமான கம்பிகள் அமைத்து மின் தடை ஏற்படுவதை தவிர்க்க வேண்டும்.

    தடையில்லாமல் மின்சாரம் கிடைக்க மின் வாரிய அதிகாரிகள் நட வடிக்கை எடுக்க வேண்டும் என மின்தடையால் தொடர்ந்து அவதிப்பட்டு வரும் விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    Next Story
    ×