என் மலர்
உள்ளூர் செய்திகள்
வீட்டின் பூட்டை உடைத்து நகை- பணம் கொள்ளை
- ரூ. 15 ஆயிரம் பணம், ரூ. 5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் திருடு போனது.
- தடய அறிவியல் நிபுணர் கார்த்திகேயன் சம்பவ இடத்திற்கு வந்து தடயங்களை பதிவு செய்தார்.
பாபநாசம்:
பாபநாசம் ஜெய் நகரில் வசித்து வருபவர் சுந்தர் ராமன் ஓய்வு பெற்ற ஆசிரியர்.
இவர் தனது வீட்டை பூட்டி விட்டு மனைவியுடன் கும்பகோணத்தில் உள்ள உறவினர் விட்டு சென்றிருந்தார்.
நேற்று காலை திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்து உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் உள்ள பீரோ கட்டில் உள்ளிட்டவை உடைக்கப்பட்டு அதிலிருந்து பொருட்கள் அலங்கோலமாக சிதறி கிடந்தது.
இதில் அவர் வீட்டில் வைத்திருந்த தங்க நகைகள் மற்றும் ரூ.15 ஆயிரம் பணம் உள்ளிட்ட ரூ. 5 லட்சம் மதிப்பிலான பொருள்கள் திருட்டு போயிருப்பது தெரிய வந்தது.
இது குறித்து சுந்தர்ராமன் பாபநாசம் காவல் நிலைய த்தில் புகார் கொடுத்தார்.
புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற பாபநாசம் துணை போலீஸ் சூப்பிரண்டு பூரணி, பாபநாசம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைவாணி, சப்- இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொ ண்டனர்.
மேலும் தஞ்சாவூரிலி ருந்து சோழா என்ற மோப்பநாய் வரவழை க்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன.
தடய அறிவியல் நிபுணர் கார்த்திகேயன் சம்பவ இடத்திற்கு வந்து தடயங்களை பதிவு செய்தார். சம்பவம் குறித்து பாபநாசம் போலீசார் வழக்கு பதிவு செய்து நகைகொள்ளையில் ஈடுப்பட்ட மர்மநபர்களை தேடி வருகிறார்கள்.