என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
விபத்து வழக்கில் பாதிக்கப்பட்டவருக்கு ரூ.65 லட்சம் இழப்பீடு- மாவட்ட முதன்மை நீதிபதி வழங்கினார்
- வருவாய்துறை வழக்குகள் மற்றும் இதர வழக்குகள் என மொத்தம் 247 வழக்குகள் இன்று எடுத்துக் கொள்ளப்பட்டன.
- விசாரணையானது மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமாகிய சீனிவாசன் முன்னிலையில் நடைபெற்றது.
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் 2023-ம் ஆண்டில் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வருவாய்துறை வழக்குகள் மற்றும் இதர வழக்குகளுக்கான சிறப்பு மக்கள் நீதிமன்றம் இன்று நெல்லை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு வால் நெல்லை மற்றும் 9 தாலுகாவில் மொத்தம் 9 அமர்வுகளுடன் நடைபெற்றது.
நிலுவையில் உள்ள வருவாய்துறை வழக்குகள் மற்றும் இதர வழக்குகள் என மொத்தம் 247 வழக்குகள் இன்று எடுத்துக் கொள்ளப்பட்டன. இந்த விசாரணையானது மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமாகிய சீனிவாசன் முன்னிலையில் நடைபெற்றது.
2-வது கூடுதல் மாவட்ட நீதிபதி பத்மநாபன், 3-வது கூடுதல் மாவட்ட நீதிபதி பன்னீர்செல்வம், 4-வது கூடுதல் மாவட்ட நீதிபதி திருமகள், குடும்ப நல நீதிமன்ற மாவட்ட நீதிபதி குமரேசன், மகளிர் நீதிமன்ற நீதிபதி விஜயகுமார், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் மனோஜ்குமார், முதன்மை சார்பு நீதிபதி அமிர்தவேலு, மோட்டார் வாகன விபத்து இழப்பீடு சிறப்பு நீதிமன்ற நீதிபதி மோகன்ராம், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செய லாளரும், சார்பு நீதிபதியுமாகிய இசக்கியப்பன், கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதிகள் சந்தானம், வள்ளியம்மாள், நீதித்துறை நடுவர்கள் திரிவேணி, ஆறுமுகம், விஜய் ராஜ்குமார், பாக்கியராஜ், கவிபிரியா, அருண்குமார் மற்றும் முரளிநாதன், நெல்லை வக்கீல் சங்க தலைவர் ராஜேஸ்வரன், செயலாளர் மணிகண்டன், வக்கீல்கள் மற்றும் நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவர் பால சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில், மொத்தம் 247 வழக்குகள் மற்றும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படாத முன் வழக்குகளாகிய வங்கிக்கடன் வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டன. மக்கள் நீதிமன்றத்தில் முதன்மை மாவட்ட நீதிபதி சீனிவாசன் மோட்டார் வாகன விபத்து வழக்கில் பாதிக்கப்பட்ட நபருக்கு ரூ. 65 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்