என் மலர்
உள்ளூர் செய்திகள்

படகில் சென்று சோதனை மேற்கொண்ட போலீசார்.
முத்துப்பேட்டை கடற்பகுதியில் சாகர் கவச் ஒத்திகை
- கடலோர பாதுகாப்பு படை போலீசார் படகில் சென்று சோதனை மேற்கொண்டனர்.
- சிறப்பு சோதனைச்சாவடி அமைக்கப்பட்டு டிரோன் மூலம் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
திருத்துறைப்பூண்டி:
முத்துப்பேட்டை கடற்கரையில் தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க சாகர் கவச் பாதுகாப்பு ஒத்திகை நடந்தது.
இதில் கடலோர பாதுகாப்பு படை காவல் உதவி ஆய்வாளர் ரகுபதி தலைமையில் போலீசார் தொண்டியக்காடு, தம்பிக்கோட்டை, கீழக்காடு, ஜாம்புவானோடை, சின்னான் கொள்ளைக்காடு உள்ளிட்ட இடங்களில் கடலோர பாதுகாப்பு படை போலீசார் படகில் சென்று சோதனை மேற்கொண்டனர்.
மேலும், முத்துப்பேட்டை நகர் பகுதிகளில் துணை போலீஸ் சூப்பிரண்டு பொறுப்பு தமிழ்மாறன், சட்டம் ஒழுங்கு டி.எஸ்.பி. சோமசுந்தரம், இன்ஸ்பெக்டர் ராஜேஷ் ஆகியோர் தலைமையில் ஆலங்காடு, தம்பிக்கோட்டை கீழக்காடு, பேட்டை, கோபாலசமுத்திரம் உள்ளிட்ட இடங்களில் சிறப்பு சோதனைச்சாவடி அமைக்கப்பட்டு சுமார் 70-க்கும் மேற்பட்ட போலீசார் டிரோன் மூலம் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
இதனை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் பார்வையிட்டார். அப்போது ஏ.டி.ஜி.பி வெள்ளத்துரை உடன் இருந்தார்.






