search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புதுப்பிக்க விண்ணப்பம் வழங்காத11 பட்டாசு நிறுவனங்களைசீல் வைத்து மூட உத்தரவு
    X

    கலெக்டர் கார்மேகம் தலைமையில் கூட்டம் நடைபெற்ற காட்சி.

    புதுப்பிக்க விண்ணப்பம் வழங்காத11 பட்டாசு நிறுவனங்களைசீல் வைத்து மூட உத்தரவு

    • பட்டாசு வெடிகளைத் தயாரிப்பதற்கான பாதுகாப்பு வழிகாட்டு நெறி முறைகளைக் கண்காணிக்கும் அலுவலர்கள் குழுவுடனான ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் கார்மேகம் தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.
    • சேலம் மாவட்டத்தில் பட்டாசு வெடிகளை தயாரித்திட 43 நிறுவனங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

    சேலம்:

    பட்டாசு வெடிகளைத் தயாரிப்பதற்கான பாதுகாப்பு வழிகாட்டு நெறி முறைகளைக் கண்காணிக்கும் அலுவலர்கள் குழுவுடனான ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் கார்மேகம் தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத் த்திற்குப்பின் கலெக்டர் நிருபர்களிடம் தெரிவித்ததாவது:-

    குழு அமைப்பு

    சேலம் மாவட்டம் முழுவதும் பட்டாசு தயாரிக்கும் இடங்களை தொடர் ஆய்வு செய்து கண்காணித்திட வருவாய்த்துறை, காவல் துறை, தொழிலக பாது காப்புத்துறை, தீயணைப்புத் துறை ஆகிய 4 துறைகளை சேர்ந்த அலுவலர்களை கொண்ட குழு வட்டார அளவில் அமைக்கப்பட்டு அவர்களுக்கு பட்டாசு வெடிகளை தயாரிப்ப தற்கான பாதுகாப்பு வழி காட்டு நெறிமுறைகள் குறித்தும் தொடர் ஆய்வு களை பாதுகாப்புடன் மேற்கொண்டு உடனுக் குடன் தகவல்களை மாவட்ட நிர்வாகத்திற்கு வழங்கிடுவது குறித்து அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

    11 நிறுவனங்கள்

    சேலம் மாவட்டத்தில் பட்டாசு வெடிகளை தயாரித்திட 43 நிறுவனங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இதில் இதுவரை புதுப்பிக்க விண்ணப்பங்கள் வழங்கப் படாமல் செயல்பாடற் றுள்ள 11 நிறுவன ங்களுக்கு விளக்கம் கோரி உரிய பதில் வழங்கப்படவில்லை எனில் பாதுகாப்பு நலன் கருதி உடனடியாக அவற்றை சீல் வைத்து மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    மீதமுள்ள பட்டாசு வெடிகளை தயாரிக்கும் நிறுவனங்களை முழுமையான பாதுகாப்பு நடைமுறை களைப் பின்பற்றினால் மட்டுமே அனுமதி வழங்கப் பட்டு தொடர்ந்து கண் காணிக்கப்படும். மாவட் டத்தில் 18 மொத்த பட்டாசு விற்பனையாளர்கள் உள்ளனர். இவர்களை பொறுத்த வரை அனுமதிக் கப்பட்ட இடங்களில் அனுமதிக்க ப்பட்ட அளவில் மட்டுமே பட்டாசுகளை இருப்பில் வைத்திடவும், ஆய்வின்போது விதி மீறல்கள் அறியப்பட்டால் பாதுகாப்பு நலன் கருதி இவர்களின் அனுமதியை ரத்து செய்யவும் அறிவுறுத் தப்பட்டுள்ளது.

    643 விண்ணப்பங்கள்

    இதுவரை தீபாவளிக் கென தற்காலிக பட்டாசு விற்பனை கடைகள் அமைத்துக் கொள்ள 643 விண்ணப்பங்கள் வரப்பெற்றுள்ளன. ஒவ்வொரு விண்ணப்பமும் முறையாக ஆய்வு செய்யப் பட்டு தகுதியில்லாத விண்ணப்பங்கள் தள்ளுபடி செய்யப்படும். திறந்தவெளி மைதானங்களில் தற்காலிக பட்டாசு விற்பனை கடைகளை அமைத்திட உரிய இடங்கள் தேர்வு செய்யப்பட்டு வருகிறது.

    இதில் பட்டாசு தயாரிப் பாளர்கள், விற்பனை யளர்கள், அலுவலர்கள், பொதுமக்கள் என அனை வரின் ஒத்துழைப்பும் இருந்தால் மட்டுமே பட்டாசு வெடி விபத்துக்களால் உயிர் சேதம் ஏற்படாமல் தடுக்க முடியும். எனவே தமிழ்நாடு அரசின் உத்தரவிற்கிணங்க, இதில் மாவட்ட நிர்வாகம் தனி கவனம் செலுத்தி வருகிறது.

    இவ்வாறு கலெக்டர் கார்மேகம் தெரிவித்தார்.

    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர் மேனகா, இணை இயக்குநர் (தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரம்) தினகரன், அனைத்து வருவாய் கோட்டாட்சியர்கள், துணை போலீஸ் சூப்பிரண்டுகள், தீயணைப்புத்துறை அலுவலர்கள் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×