என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கட்டுமான தொழிலாளர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி
- தமிழ்நாடு கட்டுமான கழகத்தால் பதிவு பெற்ற கட்டுமானத் தொழிலாளர்களுக்கு 3 மாத கால திறன் பயிற்சி மற்றும் ஒரு வார கால திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது.
- தமிழ்நாடு கட்டுமான கழகம், எல் அண்ட் டி கட்டுமான திறன் பயிற்சி நிலையத்துடன் இணைந்து இப்பயிற்சியை நடத்த உள்ளது.
சேலம்:
சேலம் தொழிலாளர் உதவி ஆணையர் சங்கீதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
திறன்மேம்பாட்டு பயிற்சி தமிழ்நாடு கட்டுமான கழகத்தால் பதிவு பெற்ற கட்டுமானத் தொழிலாளர்களுக்கு 3 மாத கால திறன் பயிற்சி மற்றும் ஒரு வார கால திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது. தமிழ்நாடு கட்டுமான கழகம், எல் அண்ட் டி கட்டுமான திறன் பயிற்சி நிலையத்துடன் இணைந்து இப்பயிற்சியை நடத்த உள்ளது.
இலவசம்
பயிற்சி பெறும் கட்டுமான தொழிலாளர்களின் கல்வித் தகுதி 5-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 மற்றும் ஐடிஐ படித்தவர்களாக இருக்கலாம். வயது 18-ல் இருந்து 40-க்குள் இருத்தல் வேண்டும்.
இதில் கொத்தனார், பற்றவைப்பவர், மின்சார பயிற்சி, குழாய் பொருத்துனர், மரவேலை, கம்பி வளைப்பவர் உள்ளிட்ட தொழில்களுக்கு கட்டணம் இன்றி பயிற்சி அளிக்கப்படுகிறது. உணவு, தங்குமிடம் ஆகியவை இலவசமாக வழங்கப்படும்.
சான்றிதழ்
ஒரு வார கால திறன் மேம்பாட்டு பயிற்சியானது, தையூரில் அமைய உள்ள தமிழ்நாடு கட்டுமான கழகத்தில் அளிக்கப்படுகிறது. இங்கு பயிற்சி பெறும் தொழிலாளர்கள் தமிழ் மொழியில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
வயது 18-க்கு மேல் இருத்தல் வேண்டும். தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்து, 3 வருடம் உறுப்பினராக இருத்தல் வேண்டும். பயிற்சியாளர்களுக்கு வேலை இழப்பு ஏற்படுவதை ஈடு செய்ய தினந்தோறும் ரூ.800 வழங்கப்படும்.
பயிற்சியின் முடிவில் மத்திய அரசின் திறன் மேம்பாடடு கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்படும். இப்பயிற்சிகள் ஆகஸ்ட் 15-ந் தேதி முதல் தொடங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்களுக்கு ஏற்காடு மெயின் ரோடு, கோரிமேடு, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் அருகில் உள்ள தொழிலாளர் உதவி ஆணையாளர் அலுவலகத்தை அணுகலாம்.
இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்