search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மன்னாயக்கன்பட்டி சக்தி மாரியம்மன் தேர்த்திருவிழா
    X

    சாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு உள்ள காட்சி.

    மன்னாயக்கன்பட்டி சக்தி மாரியம்மன் தேர்த்திருவிழா

    • வாழப்பாடி மற்றும் மன்னாயக்கன்பட்டி கிராமங்களில் கோயில் திருவிழா நடத்துவதில் முன்னோர்கள் காலந்தொட்டு பிணைப்பு தொடர்ந்து வருகிறது.
    • வாழப்பாடி திரவுபதியம்மன் கோவில் தீ மிதித் திருவிழா 10 ஆண்டுகளுக்கு பின், கடந்த மே மாத இறுதியில் சிறப்பாக நடைபெற்றது.

    வாழப்பாடி:

    வாழப்பாடி மற்றும் மன்னாயக்கன்பட்டி கிராமங்களில் கோயில் திருவிழா நடத்துவதில் முன்னோர்கள் காலந்தொட்டு பிணைப்பு தொடர்ந்து வருகிறது. வாழப்பாடியில் திரவுபதி அம்மன் மற்றும் மாரியம்மன் கோவில் திருவிழா நடத்தும் போது, மன்னாயக்கன்பட்டி கிராமத்தினரை அழைப்பதும், மன்னாயக்கன்பட்டி கிராமத்தில் திருவிழா நடத்தும் போது, வாழப்பாடி கோவில்களிலுள்ள சுவாமி சிலைகளையும், நிர்வாகிகளையும் விருந்துக்கு அழைத்து செல்வதும் இன்றளவும் மரபாக தொடர்ந்து வருகிறது.

    வாழப்பாடி திரவுபதியம்மன் கோவில் தீ மிதித் திருவிழா 10 ஆண்டுகளுக்கு பின், கடந்த மே மாத இறுதியில் சிறப்பாக நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து மன்னாயக்கன்பட்டி கிராமத்தில் சக்தி மாரியம்மன் திருவிழா நடத்திட ஊர் பெரியதனக்காரர்கள் முடிவு செய்தனர். முன்னோர்கள் வழக்கப்படி கிராமம் முழுவதும் வீடுகள் தோறும் கோயில் காளை அலங்கரித்து அழைத்துச் சென்று தேர்திருவிழா செலவுக்கு வரி வசூல் செய்தனர்.

    இதனையடுத்து நாளை சக்தி மாரியம்மனுக்கு திருக்கல்யாணமும், திருத்தேர் நிலை பெயர்த்தலும், நாளை மற்றும் நாளை மறுதினம் 2 நாட்களும் தேரோட்டம் நடைபெறுகிறது. தேர்த்திருவிழாவையொட்டி மாரியம்மன் பிறப்பு குறித்த இசைப்பாட்டு சொற்பொழிவு 2 வாரங்களாக நடந்து வருவதும், வாழப்பாடி திரவுபதி அம்மன் கோவில் இருந்து மரச்சிற்ப சுவாமி சிலைகளை விருந்துக்கு அழைத்துச் சென்று, மன்னாயக்கன்பட்டி மாரியம்மன் கோயிலில் வைத்து தினந்தோறும் சிறப்பு பூஜை வழிபாடு நடத்தி வருவதும் குறிப்பிடதக்கதாகும்.

    Next Story
    ×