என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தொடர் விடுமுறை எதிரொலி சேலம் பஸ், ரெயில் நிலையங்களில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது
- நாடு முழுவதும் நாளை (திங்கட்கிழமை) விநாயகர் சதுர்த்தி வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது.
- நேற்று முன்தினம் மதியம் முதல் புதிய பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
சேலம்:
நாடு முழுவதும் நாளை (திங்கட்கிழமை) விநாயகர் சதுர்த்தி வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி நாளை விடுமுறை விடப்பட்டுள்ளது. மேலும் பள்ளி, கல்லூரிகளுக்கு நேற்று முதல் நாளை வரை என 3 நாட்கள் தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் முதல்...
மேலும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) சுப முகூர்த்த நாள் ஆகும். இதனால் சேலத்தில் வசிக்கும் வெளியூர்களை சேர்ந்தவர்கள் நேற்று முன்தினம் முதல் தங்களது சொந்த ஊர்களுக்கு குடும்பத்தினருடன் புறப்பட்டு சென்றனர். பொதுமக்கள் வசதிக்காக சேலத்தில் இருந்து முக்கிய நகரங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
நேற்று முன்தினம் மதியம் முதல் புதிய பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. பின்னர் இரவில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. பஸ்களில் இடம் பிடிப்பதற்காக பயணிகள் ஒருவரையொருவர் முண்டியடித்து ஏறினர்.
ரெயில்களில் கூட்டம் அலைமோதியது
இதேபோல் சேலம் வழியாக வெளியூர்களுக்கு சென்ற ரெயில்களிலும் நேற்று முன்தினம் மாலை முதல் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. ரெயிலில் முன்பதிவு இல்லாத ெபாது பெட்டிகளிலும் பொதுமக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. நேற்று நள்ளிரவு 1 மணி வரை பயணிகளின் கூட்டம் இருந்து கொண்டே இருந்தது.
அதேப்போல் ரெயில் மற்றும் பஸ் நிலையங்களில் வெளியூரில்களில் இருந்து சேலத்திற்கு வந்த பொதுமக்கள் கூட்டமும் அதிகளவில் காணப்பட்டது.
தொடர்ந்து இன்று அதிகாலை முதல் சேலத்தில் இருந்து வெளியூருக்கு செல்வோர் எண்ணிக்கையும், வெளியூர்களில் இருந்து சேலத்திற்கு வருவோர் எண்ணிக்கையும் அதிகரித்தப்படி இருந்தது.
குறிப்பாக இன்று சேலம் புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையத்தில் பயணிகள் குவிந்தனர். வழக்கமாக இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
குறிப்பாக சென்னை, வேலூர், விழுப்புரம், திருச்சி, கோவை, திருப்பூர், மதுரை உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு அதிகப்படியான மக்கள் பயணம் செய்தனர்.
போக்குவரத்து நெரிசல்
இதைத்தவிர விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து பொதுமக்கள் விநாயகர் சதுர்த்தியை யொட்டி பொருட்கள் வாங்குவ தற்காக சேலம் டவுன் ரெயில் நிலையம், ஜங்சன் ரெயில் நிலையத்திற்கு வந்தபடி இருந்தனர். அதே போல் நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பக்கத்து மாவட்டங்களில் இருந்தும் ரெயில்கள், பஸ்கள் மூலமாக சேலம் வந்தபடி இருந்தனர்.
இதேபோல் கொளத்தூர், மேட்டூர், மேச்சேரி, தாரமங்கலம், ஓமலூர், காடையாம்பட்டி, தொப்பூர், சங்ககிரி, எடப்பாடி, கெங்கவல்லி, நங்கவள்ளி, ஏற்காடு, ஆத்தூர், தலைவாசல், வீரபாண்டி, வீராணம், வாழப்பாடி, அயோத்தியாப் பட்டணம் உள்பட உள்ளூர் பகுதி மக்களும் விநாயகர் சதுர்த்தியை உற்சாகமாக கொண்டாடுவதற்கு பொருட்கள் வாங்கவும், வெளியூர்களுக்கு செல்லவும் பொதுமக்கள் குவிந்ததால் சுவர்ணபுரி, மெய்யனூர் ரோடு, புதிய பஸ்நிலையம், சேலம் 4 ரோடு, டி.வி.எஸ் பஸ் நிறுத்தம், கடைவீதி, பழைய பஸ் நிலையம், 5 ரோடு, சாரதா கல்லூரி சாலை, அஸ்தம்பட்டி, குகை, அம்மாப்பேட்டை, செவ்வாய்ப்பேட்டை, லீ பஜார், சூரமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் ஒவ்வொரு வாகனங்களும் மெதுவாக ஊர்ந்து சென்றது.
கண்காணிப்பு
போலீசார் வாகன நெரிசலை கட்டுப்படுத்தியும், கண்காணித்தப்படியும் உள்ளனர். கூட்டம் அதிக மாக உள்ள இடங்களில் பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்