search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலம் ராஜகணபதி கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா
    X

    சேலம் ராஜகணபதி கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா

    • 18-ந் தேதி அதிகாலை 4 மணி முதல் 6 வரை கணபதி ஹோமம், அபிஷேகம் நடைப்பெற்று ராஜகணபதிக்கு தங்க கவசம் சாத்துப்படி நடைப்பெற உள்ளது.
    • இரவு 8 மணியளவில் தினமும் சிறப்பு அலங்காரத்துடன் சுவாமி திருவீதி புறப்பாடு நடைப்பெறும்.

    சேலம்:

    சேலம் ராஜகணபதி கோவிலில் வருகிற 18-ந் தேதி முதல் விநாயகர் சதுர்த்தி விழா விமரிசையாக நடைபெற உள்ளது. 18-ந் தேதி அதிகாலை 4 மணி முதல் 6 வரை கணபதி ஹோமம், அபிஷேகம் நடைப்பெற்று ராஜகணபதிக்கு தங்க கவசம் சாத்துப்படி நடைப்பெற உள்ளது.

    இந்த விழாவை முன்னிட்டு 18-ந் தேதி முதல் 12 நாட்களுக்கு காலை, மாலையில் மூலமந்திர ஹோமம், லட்சார்ச்சனையும் நடைபெறுகிறது. காலை 10 மணி முதல் 12 மணி வரை மூலவர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை நடைபெற உள்ளது.

    இரவு 8 மணியளவில் தினமும் சிறப்பு அலங்காரத்துடன் சுவாமி திருவீதி புறப்பாடு நடைப்பெறும். மேலும் மாலை வேலையில் ஆன்மிக கலை நிகழ்ச்சிகள் நடைப்பெற உள்ளது.

    12-ம் நாள் காலை 7 மணி முதல் 10 மணி வரை மஞ்சள் நீராட்டு, வசந்த உற்சவமும், காலை 10 மணி முதல் 12.30 மணி வரை உற்சவ ஆஸ்தான பூஜைகள், 1008 லிட்டர் பால் அபிஷேகமும் நடைபெறுகிறது. தொடர்ந்து புஷ்பாஞ்சலி மற்றும் அன்னதானம் நடைப்பெற உள்ளது.

    எனவே அனைத்து பக்கதர்கள், பொதுமக்கள் இந்த நிகழ்வுகளில் பங்கேற்று இறைவன் அருள் பெற வேண்டும் என அறங்காவலர் குழு தலைவர் சோனா வள்ளியப்பா, அறங்காவலர்கள் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

    Next Story
    ×