என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
அய்யந்திருமாளிகை பள்ளி வளாகத்தில் அறிவுசார் மைய கட்டடத்தை ஆணையாளர் ஆய்வு
- சேலம் அய்யந்திரு மாளிகை தொடக்கப்பள்ளி வளாகத்தில் அறிவுசார் மையம் மற்றும் ஆய்வு மைய கட்டிடம் சீர்மிகு நகரத்திட்டத்தின் கீழ் ரூ.2.50 கோடி மதிப்பில் அமைக்கும் பணிகள் முடிவுற்று விரைவில் திறக்கப்பட உள்ளது.
- இந்த மையத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் பாலச்சந்தர் இன்று ஆய்வு செய்தார்.
சேலம்:
சேலம் அய்யந்திரு மாளிகை தொடக்கப்பள்ளி வளாகத்தில் அறிவுசார் மையம் மற்றும் ஆய்வு மைய கட்டிடம் சீர்மிகு நகரத்திட்டத்தின் கீழ் ரூ.2.50 கோடி மதிப்பில் அமைக்கும் பணிகள் முடிவுற்று விரைவில் திறக்கப்பட உள்ளது. இந்த மையம் தரைதளம், முதல் தளம் ஆகிய 2 தளங்களை கொண்டது.
தரை தளத்தில் 60 நபர்கள் அமரக்கூடிய வாசிப்பு அறை, 10 எண்ணிக்கை கொண்ட கணினி மையம், நூலக அறை, கண்காணிப்பு கேமராவுடன் கூடிய கட்டுப்பாட்டு அறை, முதல் தளத்தில் 35 நபர்கள் அமரக்கூடிய வாசிப்பு அறை, 5 எண்ணிக்கை கொண்ட கணினி மையம், 30 நபர்களுக்கான ஸ்மார்ட் வகுப்பறை அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் இம்மையத்தில் சிறப்பு அம்சங்களான சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், 16 எண்ணிக்கையிலான கண்காணிப்பு கேமரா, 75 இஞ்ச் எல்.சி.டி 2 தொலைக்காட்சி, 2 புரஜெக்டர், ஸ்மார்ட் வகுப்புகளுக்கான மைக் மற்றும் சுவர் ஒலி பெருக்கிகள், புத்தக அலமாரிகள், சைகை மொழி பேனர்கள், அபாகஸ் உபகரணங்கள், டிக்டாக் டோ உபகரணங்கள், கண்ணாடி புரம்மை உபகரணங்கள், தளவாட பொருட்கள், மையத்திற்கு வெளியில் அமர்வதற்கான இருக்கைகள், கழிப்பறை வசதிகள் போன்ற சிறப்பு அம்சங்கள் உள்ளன.
இந்த மையத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் பாலச்சந்தர் இன்று ஆய்வு செய்தார். அனைத்து பணிகளும் முழுமையாக முடிக்கப்பட்டுள்ளதா என்பதையும் கேட்டறிந்து தொடர்ந்து மையத்தை நன்கு பராமரிப்பு செய்திட வேண்டும் எனவும் அலுவலர்களுக்கு அவர் உத்தரவிட்டார்.
ஆய்வின்போது செயற் பொறியாளர் கு.செந்தில்குமார், உதவி செயற் பொறியாளர் எஸ்.செந்தில்குமார், உதவி பொறியாளர் அன்புசெல்வி ஆகியோர் உடனிருந்தனர்.