search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் 63 நாயன்மார்களுடன் சாமி வீதி உலா
    X

    கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோயிலில் 63 நாயன்மார்கள் வீதி உலா நடைபெற்றது.

    கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் 63 நாயன்மார்களுடன் சாமி வீதி உலா

    • கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் 63 நாயன்மார்களுடன் சாமி வீதி உலா நடைபெற்றது.
    • ஸ்ரீ மனோன்மணி அம்பிகா சமேத சந்திரசேகர் சாமிக்கும் விசேஷ சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாரதனை நடைபெற்றது.

    கடலூர்:

    கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் பிரசித்தி பெற்ற பாடலீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் 63 நாயன்மார்கள் உற்சவம் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் காலையில் பாடலீஸ்வரருக்கும், ஸ்ரீ மனோன்மணி அம்பிகா சமேத சந்திரசேகர் சாமிக்கும் விசேஷ சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாரதனை நடைபெற்றது. இதனை தொடர்ந்து பாடலீஸ்வரர் மற்றும் 63 நாயன்மார்களுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வெளியில் கொண்டுவரப்பட்டன. பின்னர் ரிஷப வாகனத்தில் பாடலீஸ்வரர், 63 நாயன்மார்களும் வாகனங்களில் எழுந்தருளினர். பின்னர் ஊர்வலமாக பாடலீஸ்வரரும், 63 நாயன்மார்களும் முக்கிய மாடவீதியில் சென்றனர்.இந்த காட்சி பக்தி பரவசத்தை ஏற்படுத்தியதோடு ஏராளமான பொதுமக்கள் சாமி ஊர்வலத்துடன் சென்றனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்‌ பூஜைக்கான ஏற்பாடுகளை நாகராஜ் குருக்கள், ராகேஷ் குருக்கள் மற்றும் பலர் செய்திருந்தனர்

    Next Story
    ×