search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஸ்கூட்டர் மீது மணல் லாரி மோதி பெண் பலி
    X

    தஞ்சாவூர் மருத்துவ சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.

    ஸ்கூட்டர் மீது மணல் லாரி மோதி பெண் பலி

    • மணல் லாரி எதிர்பாராத விதமாக ஸ்கூட்டர் மீது மோதியது.
    • மருத்துவக் கல்லூரி சாலையில் பொதுமக்கள் திரண்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலை சுந்தரம் நகரைச் சேர்ந்தவர் அப்துல் காதர்.

    இவரது மனைவி ஜெரினா பேகம் (வயது 36).

    இவர் இன்று காலை ரெட்டிபாளையம் சாலையிலுள்ள தனியார் பள்ளியில்

    படிக்கும் தனது மகள் சபிகா (14) , மகன் முகமது சைபு (4) ஆகியோரை விடுவதற்காக ஸ்கூட்டரில் அழைத்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது பள்ளி அருகே சென்றபோது அந்த வழியாக வந்த மணல் லாரி எதிர்பாராத விதமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ஜெரினாபேகம் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    குழந்தைகள் சபிகா, முகமது சைபு ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.

    அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதனிடையே, சம்பவம் நடந்த இடத்தில் அடிக்கடி சாலை விபத்துக்கள் ஏற்படுவதால், அங்கு வேகத்தடை அமைக்க கோரி மருத்துவக் கல்லூரி சாலையில் பொதுமக்கள் திரண்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தகவலறிந்த மருத்துவக் கல்லூரி போலீசார், போக்குவரத்து காவல் ஒழுங்கு பிரிவினர் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததைத் தொடர்ந்து, மறியல் போராட்டம் கைவிடப்ப ட்டது.

    இதனால் அப்பகுதியில் சுமார் 1 மணிநேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.

    Next Story
    ×