search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடையநல்லூர் நகராட்சி சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா
    X

    மரக்கன்று நடவு செய்யும் போது எடுத்த படம்

    கடையநல்லூர் நகராட்சி சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா

    • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் அறிவிப்பின் படி தமிழகம் முழுவதும் ரூ.25 கோடி மதிப்பில் நகர்புற காடுவளர்ப்பு திட்டம் தொடங்கப்பட்டது.
    • கடையநல்லூர் நகராட்சி போகநல்லூர் உரக்கிடங்கில் ரூ. 7 லட்சத்து 78 ஆயிரம் மதிப்பில் வேம்பு, கொடுக்காபுள்ளி, நாவல், நெல்லி, புளிய மரம் மற்றும் பாதாம் உள்ளிட்ட மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

    கடையநல்லூர்:

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் அறிவிப்பின் படி தமிழகம் முழுவதும் ரூ.25 கோடி மதிப்பில் நகர்புற காடுவளர்ப்பு திட்டம் தொடங்கப்பட்டது.

    அதன்படி கடையநல்லூர் நகராட்சி போகநல்லூர் உரக்கிடங்கில் ரூ. 7 லட்சத்து 78 ஆயிரம் மதிப்பில் வேம்பு, கொடுக்காபுள்ளி, நாவல், நெல்லி, புளிய மரம் மற்றும் பாதாம் உள்ளிட்ட மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. இதில் 2698 மரக்கன்றுகள் நடப்பட்டது.

    விழாவிற்கு கடைய நல்லூர் நகர்மன்ற தலைவர் ஹபீபுர் ரஹ்மான் தலைமை தாங்கினார். நகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரன், பொறியாளர் லதா, இள நிலை பொறியாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    அய்யாபுரம் கூட்டுறவு சங்க தலைவரும், வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பா ளருமான செல்லத்துரை மரக்கன்றுகளை நட்டு திட்டத்தை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் நகர்மன்ற உறுப்பினர்கள் முகைதீன் கனி, முருகன், மாவட்ட நெசவாளர் அணி அமைப் பாளர் மூவன்னா மசூது, மற்றும் தி.மு.க. பிரமுகர்கள், பொது மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×