search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லித்தோப்பு காத்தாயி அம்மன் கோவிலில் சத சண்டி மகாயாகம்
    X

    காத்தாயி அம்மன் கோவிலில் சத சண்டி மகாயாகம் நடந்தது.

    நெல்லித்தோப்பு காத்தாயி அம்மன் கோவிலில் சத சண்டி மகாயாகம்

    • ஆடி மாத கடைசி வெள்ளியான இன்று நவதுர்கா ஹோமம் நடைபெற்றது.
    • 16-ந் தேதி விடையாற்றி விழா -சாந்தி ஹோமம் நடைபெற உள்ளன.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் நெல்லி த்தோப்பு கோவிலூரில் பிரசித்தி பெற்ற காத்தாயி அம்மன் கோவில் அமைந்துள்ளது.

    இந்த கோவிலில் தினமும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வர்.

    தற்போது கோவிலில் ஆடி மாத திருவிழா நடந்து வருகிறது.

    விழாவில் சத சண்டி மகாயாகம் நடைபெற்றது.

    தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    ஆடி மாதம் கடைசி வெள்ளிக்கிழமையான இன்று நவ துர்கா ஹோமம் நடைபெற்றது.

    வருகிற 13-ஆம் தேதி முனீஸ்வரர் சிறப்பு பூஜை நடைபெற உள்ளது.

    14-ம் தேதி ஆடிக் கழிவு பெருவிழா நடக்கிறது. 15-ம் தேதி முனீஸ்வரர் படையல் பூஜையும், 16-ம் தேதி விடையாற்றி விழா -சாந்தி ஹோமமும் நடைபெற உள்ளன.

    விழாவுக்கான ஏற்பாடுகளை காத்தாயி அடிமை சாமிநாதன் முனையதிரியர் தலைமையில் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×