என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கோவை கமிஷனர் அலுவலகத்தில் நடிகை விஜய லட்சுமி மீது சீமான் கட்சியினர் புகார்
- அரசியல்வளர்ச்சியை தடுக்க வேண்டும் என்று தீய நோக்கத்துடன், வீரலட்சுமியுடன் கூட்டுசேர்ந்து சதி திட்டம் தீட்டியதாக குற்றச்சாட்டு
- விஜயலட்சுமி மற்றும் அவரை தூண்டிவிடும் வீரலட்சுமி மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை
கோவை,
கோவை மண்டல நாம் தமிழர் கட்சி செயலா ளர் அப்துல் வகாப் தலை மையில் நிர்வாகிகள் மாந கர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்து உள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:
எங்கள் கட்சி யின் தலைமை ஒருங்கிணைப்பா ளர் சீமான் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலும், அவரது அரசியல்வளர்ச்சியை தடுக்க வேண்டும் என்று தீய நோக்கத்துடனும் நடிகை விஜயலட்சுமி மற்றும் அவருடன் வீரலட்சுமி என்பவரும் கூட்டுசேர்ந்து சதி திட்டம் தீட்டி பொய்யாக அவதூறு குற்றச்சாட்டினை 15 ஆண்டுகளுக்கு பிறகு பணம் பறிக்க வேண்டும், நாம் தமிழர் கட்சிக்கு அவப்பெயர் உண்டாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் சென்னை மாநகர போலீஸ் கமிஷனரிடம் அளித்து உள்ளனர்.
பின்னர் அவர்கள் இரு மதத்தினர் மற்றும் பிரிவினர் இடையே பகை உணர்வை தூண்டும் விதமாக அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன், மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் சட்டம்-ஒழுங்கு மற்றும் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படும் வகையிலும் பேசி உள்ளனர். எனவே நடிகை விஜயலட்சுமி மற்றும் அவரை தூண்டிவிடும் வீரலட்சுமி ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.