search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    8-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு தேசிய வருவாய்வழி கல்வி உதவி தொகைக்கான தேர்வு
    X

    சண்முகா மருத்துவமனை மற்றும் தனியார் தொலைக்காட்சி இனைந்து நடத்திய புத்தாண்டு சிறப்பு பட்டிமன்றத்தை குரு பில்டர்ஸ் நிறுவனர் அன்புராஜா குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். அருகில் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் மற்றும் சண்முகா மருத்துவமனை இயக்குனர் டாக்டர் பன்னீர்செல்வம் உள்ளிட்ேடார் உள்ளனர்.

    8-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு தேசிய வருவாய்வழி கல்வி உதவி தொகைக்கான தேர்வு

    • தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் திட்டத்தின் (என்எம்எம்எஸ்) கீழ், 8ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு படிப்புதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
    • தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு, 9-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 முடிக்கும் வரை மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும்.

    சேலம்:

    தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் திட்டத்தின் (என்எம்எம்எஸ்) கீழ், 8ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு படிப்புதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

    இதற்காக நடத்தப்படும் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு, 9-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 முடிக்கும் வரை மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும்.

    அதன்படி தமிழகத்தில் 2022-2023ம் கல்வியாண்டிற்கு அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கான என்எம்எம்எஸ் தேர்வு, அடுத்த ஆண்டு பிப்ரவரி- 25ம் தேதி (சனிக்கிழமை) நடைபெறுகிறது.

    இத்தேர்விற்கான விண்ணப்பங்களை வரும் 26-ம் தேதி முதல் ஜனவரி 20-ம் தேதி வரை, https://dgel.tn.gov.in என்ற இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேர்வுக் கட்டணத் தொகை ரூ.50 சேர்த்து, மாணவர்கள் பயிலும் பள்ளித் தலைமை யாசிரியரிடம் சமர்ப்பிக்க வேண்டும் . இதற்கான கடைசி நாளாக ஜனவரி 24-ம் தேதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×