search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாபெரும் சோழர் அருங்காட்சியகம் அமைக்க இடம் தேர்வு- அமைச்சர் ஆய்வு
    X

    மாபெரும் சோழர் அருங்காட்சியகம் அமைப்பதற்கான தேர்வு செய்யப்பட்ட இடத்தையும் அமைச்சர் சாமிநாதன் ஆய்வு செய்தார்.

    மாபெரும் சோழர் அருங்காட்சியகம் அமைக்க இடம் தேர்வு- அமைச்சர் ஆய்வு

    • தஞ்சாவூரில் மாபெரும் சோழர் அருங்காட்சியகம் அமைத்தல் தொடர்பாக செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் ஆய்வு மேற்கொண்டார்.
    • 12 ஏக்கர் பரப்பளவிலுள்ள இந்த இடத்தில் அருங்காட்சியகம் அமைப்பதற்கான 5 ஏக்கர் இடம் கிடைக்கும் சூழல் இருக்கிறது.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு முதல்-அமைச்சர் உத்தரவுக்கிணங்க தஞ்சாவூர் மாவட்டத்தில் மாபெரும் சோழர் அருங்காட்சியகம் அமைத்தல் தொடர்பாக அரசு தலைமை கொறடா கோவி.செழியன், மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் ஆகியோர் முன்னிலையில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன் ஆய்வு மேற்கொண்டார்.

    பின்னர் அவர் கூறியதாவது :-

    மாபெரும் சோழர் அருங்காட்சியகம் அமைப்பதற்காக தஞ்சாவூர் பெரியகோயில் அருகேயுள்ள மேம்பாலம் அருகில் உள்ள இடத்தை மாவட்ட கலெக்டர் ஏற்கெனவே தேர்வு செய்து, துறைச் செயலர் உள்ளிட்ட அலுவலர்களிடம் காண்பித்துள்ளார்.

    இந்த இடம் ஏற்புடையதாக உள்ளது என துறைச் செயலர் கூறியதன் அடிப்படையில் ஆய்வு செய்யப்பட்டது. தஞ்சாவூர் மாநகரில் இவ்வளவு பெரிய இடம் கிடைத்திருப்பது அரிய வாய்ப்பாக இருக்கிறது.

    இந்த இடத்துக்கு வருவதற்கான வழிகள் குறித்து விரிவான ஆய்வு செய்த பிறகு இறுதி முடிவு எடுக்கப்படும்.

    ஏறத்தாழ 12 ஏக்கர் பரப்பளவிலுள்ள இந்த இடத்தில் அருங்காட்சியகம் அமைப்பதற்கான 5 ஏக்கர் இடம் கிடைக்கும் சூழல் இருக்கிறது.

    இதை மேலும் ஆய்வு செய்து, முடிவு எடுக்கப்பட்டு, முதலமைச்சர் கவனத்துக்குக் கொண்டு சென்று அருங்காட்சியகம் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். அருங்காட்சியகம் அனைவருக்கும் பயன் உள்ளதாக இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் துரை சந்திர சேகரன், டி. கே. ஜி. நீலமேகம், கூடுதல் கலெக்டர் (வருவாய்) சுகபுத்ரா, தாசில்தார் சக்திவேல், தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண் .ராமநாதன் , துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மாவட்ட ஊராட்சி தலைவர் உஷா புண்ணியமூர்த்தி , மாவட்ட சுற்றுலா அலுவலர் நெல்சன், மாவட்ட சுற்றுலா வளர்ச்சிக் குழுமம் முத்துக்குமார், தஞ்சாவூர் அரசு அருங்கா ட்சியம் காப்பாட்சியர் (பொ) சிவகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×