என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கோப்ரா வித்தியாசமான ஜானரில் தயாராகி இருக்கிறது...ஏழு கெட்டப்புகளில் நடித்திருக்கிறேன்- சீயான் விக்ரம்
- திருச்சி, மதுரையை தொடர்ந்து கோவையில் ரசிகர்களை சந்தித்தார் விக்ரம்.
- ஆகஸ்ட் 31 ஆம் தேதி வெளியாகிறது கோப்ரா.
இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் சீயான் விக்ரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் கோப்ரா. செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ் லலித்குமார் தயாரித்திருக்கும் இந்த திரைப்படம் ஆகஸ்ட் 31 ஆம் தேதி முதல் வெளியாகிறது.
இப்படத்தில் இயக்குநர் கே. எஸ். ரவிக்குமார், ஆனந்த்ராஜ், ரோபோ சங்கர், நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி, மீனாட்சி கோவிந்தராஜன், மிருணாளினி ரவி, நடிகர் ரோஷன் மேத்யூ, கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் 'இசைப்புயல்' ஏ. ஆர். ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
தமிழகமெங்கும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடும் இந்த திரைப்படத்தை மேலும் பிரபலப்படுத்துவதற்காக சீயான் விக்ரம் தலைமையிலான படக்குழுவினர் திருச்சி, மதுரை உள்பட பல இடங்களில் கல்லூரிகளிலும், முன்னணி வணிக வளாகங்களிலும் ரசிகர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்கள்.
அந்த வகையில் நேற்று கோவையிலுள்ள ஜி ஆர் டி கல்லூரி வளாகத்திலும், ப்ரோஸோன் வணிக வளாகத்திலும் மாணவ மாணவிகளின் முன்னிலையில் கோப்ரா படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்வு நடைபெற்றது. இதில் சீயான் விக்ரம், நடிகைகள் ஸ்ரீநிதி ஷெட்டி, மிருணாளினி ரவி மற்றும் மீனாட்சி கோவிந்தராஜன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அப்போது விக்ரம் பேசியதாவது: கோப்ரா திரைப்படம், சைக்கலாஜிக்கல் திரில்லர், எமோஷனல் டிராமா, சயின்ஸ் ஃபிக்சன், ஹை ஆக்டேன் ஆக்சன் ஃபிலிம் என எல்லாம் கலந்த மாஸ் எண்டர்டெய்னர் திரைப்படம். இயக்குநர் அஜய் ஞானமுத்து, இயக்கத்தில் வெளியான 'டிமாண்டி காலனி', 'இமைக்கா நொடிகள்' என ஒவ்வொன்றும் வித்தியாசமான திரைக்கதையுடன் வெளியானது.
அதேபோல் 'கோப்ரா' படமும் வித்தியாசமான ஜானரில் தயாராகி இருக்கிறது. அனைவருக்கும் பிடிக்கும். இந்தப் படத்தில் நான் ஏழு கெட்டப்புகளில் நடித்திருக்கிறேன். அதுவும் இந்த படத்தின் திரைக்கதையில் முக்கியமான அம்சம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்