search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மின்கம்பி மீது விழுந்த மரத்தை அகற்றிய தீயணைப்பு வீரர்கள்
    X

    மின்கம்பி மீது விழுந்த மரத்தை அகற்றிய தீயணைப்பு வீரர்கள்

    • அதிகாலை நேரத்திலும் விரைந்து வந்து நடவடிக்கை
    • தீயணைப்பு படையினருக்கு பொதுமக்கள் பாராட்டு

    அருவங்காடு,

    குன்னூரில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதில் குன்னூர் நகரப்பகுதி மட்டுமல்லாமல் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது.

    இதில் மண் மற்றும் மரங்கள் விழுந்தும் குடியிருப்பு வாசிகள் பெரிதும் பாதிப்புள்ளாகி வருகின்றனர் இதனிடையே குன்னூர் தீயணைப்புத் துறையினர் ஒன்றிணைந்து தனித்தனி குழுவாக பிரிந்து மீட்பு பணிகளில் நேரம் காலம் பாராமல் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

    மலைப்பாதை மட்டு மல்லாமல் குடியிருப்பு பகுதிகளில் இடர்பாடு களுக்கு இடையே சிக்கி தவிக்கும் பொதுமக்களை மீட்டு பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்கின்றனர்.

    இதில் இன்று அதிகாலை 1 மணி அளவில் குன்னூர் பகுதியில் உள்ள புருக்லேண்ட்ஸ் பகுதியில் ராட்சத மரம் மின் கம்பி மீது சாய்ந்ததால் அப்பகுதி முழுவதும் மின்தடை ஏற்பட்டது.

    அந்த இருட்டு நிறைந்த நேரத்திலும் தீயணைப்புத் துறையினர் நான்கு மணி நேரம் போராட்டத்திற்கு பின்னர் மரத்தை அகற்றினர். இதனைத் தொடர்ந்து இந்தக் குழுவினர் மாறி மாறி ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    அதிகாலை நேரத்திலும் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்ட தீயணைப்புத்துறையினரை அந்த பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர்.

    Next Story
    ×