என் மலர்
உள்ளூர் செய்திகள்

X
நாங்குநேரி அருகே இரட்டை ரெயில் பாதை பணிகளை தென்னக ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு
By
மாலை மலர்26 Sept 2022 3:10 PM IST

- நாகர்கோவிலில் இருந்து மேலப்பாளையம் வரை மின் மயமாக்கலுடன் புதிய இரட்டை ரெயில் பாதை அமைக்கும் பணிகள் 4 கட்டமாக நடந்து வருகிறது.
- 2-ம் கட்டமாக வள்ளியூரில் இருந்து நாங்குநேரி வரை மின்மயமாக்களுடன் கூடிய இரட்டை ரெயில் பாதைப்பணிகள் நிறைவடைந்துள்ளது.
நெல்லை:
திருவனந்தபுரம் ரெயில்வே கோட்டத்தில் நாகர்கோவிலில் இருந்து மேலப்பாளையம் வரை மின் மயமாக்கலுடன் புதிய இரட்டை ரெயில் பாதை அமைக்கும் பணிகள் 4 கட்டமாக நடந்து வருகிறது.
இதில் முதல் கட்டமாக ஆரல்வாய்மொழியில் இருந்து வள்ளியூர் வரையிலான பணிகள் நிறைவடைந்து ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.
2-ம் கட்டமாக வள்ளி யூரில் இருந்து நாங்குநேரி வரை மின்மயமாக்களுடன் கூடிய இரட்டை ரெயில் பாதைப்பணிகள் நிறைவடைந்துள்ளது.
இதனை தென்னக ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் அபயக்குமார் ராய் இன்று காலை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இதனை தொடர்ந்து இன்று மாலை 3 மணியளவில் வள்ளியூர் முதல் நாங்குநேரி வரையில் அதிவேக ரெயில் சோதனை ஓட்டம் நடக்க இருக்கிறது.
Next Story
×
X