search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைக்க சிறப்பு முகாம்- கலெக்டர் தகவல்
    X

    கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்.

    வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைக்க சிறப்பு முகாம்- கலெக்டர் தகவல்

    • விவரங்களை வாக்குச்சாவடி நிலைய அலுவலர்களிடம் பூர்த்தி செய்து கொடுத்து ஆதார் எண்ணை இணைத்துக்கொள்ளலாம்.
    • பான் கார்டு உட்பட 11 வகையான இதர ஆவணங்களில் ஏதேனும் ஒரு ஆவணத்தின் விபரத்தினை வழங்கலாம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்கு றிப்பில் கூறியிருப்பதாவது:-

    இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல் பேரில் தஞ்சாவூர் மாவட்டத்தில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான பணி மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்றத் தொகுதிகளிலும் 1-8-2022 முதல் முழுவீச்சில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    தஞ்சாவூர் மாவட்டத்தில் 8 சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள வாக்காளர்களில் இதுவரை சுமார் 6 லட்சம் வாக்காளர்கள் தங்களது ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைத்துள்ளனர்.

    தற்பொ ழுது பொதுமக்கள் நலன் கருதி நாளை (ஞாயிற்றுக்கிழமை) தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 2305 வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைப்பதற்கு ஏதுவாக சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

    எனவே, பொதுமக்கள் அனைவரும் தாங்களாகவே முன் வந்து அவர்கள் வழக்கமாக வாக்குச் செலுத்தக்கூடிய வாக்குச்சாவடிகளில் அவர்களது ஆதார் எண், வாக்காளர் அடையாள அட்டை எண் மற்றும் மொபைல் எண் ஆகிய விவரங்களை வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் படிவம் 6B -இல் பூர்த்தி செய்து கொடுத்து வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைத்துக்கொள்ளலாம்.

    பொதுமக்கள் அவர்களது ஆதார் எண் மற்றும் வாக்காளர் அடையாள அட்டையின் ஜெராக்ஸ் நகலினை கொடுக்க வேண்டிய கட்டாயமில்லை.

    ஆதார் எண் இல்லாதவர்கள் இந்திய தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ள 100 நாள் வேலை அடையாள அட்டை, அஞ்சல் / வங்கி கணக்கு புத்தகம், ஓட்டுநர் உரிமம், பான் கார்டு உட்பட 11 வகையான இதர ஆவணங்களில் ஏதேனும் ஒரு ஆவணத்தின் விபரத்தினை வழங்கலாம்.

    எனவே, நாளைநடைபெறவுள்ள சிறப்புமுகாமில் பொதுமக்கள் அனை வரும் பங்குபெற்று இரட்டை பதிவற்ற நூறுசதவீத தூய்மையான வாக்காளர் பட்டியலினை ஏற்படுத்து வதற்கு தங்களது முழு பங்களிப்பும் ஒத்துழைப்பும் நல்கிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×