என் மலர்
உள்ளூர் செய்திகள்
X
முன்னாள் படைவீரர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் விஷ்ணு தகவல்
Byமாலை மலர்21 Dec 2022 2:56 PM IST
- நெல்லை மாவட்ட முன்னாள் படைவீரர்கள், படைவீரர்களை சார்ந்தோர்கள் நலனை கருத்தில் கொண்டு முன்னாள் படைவீரர் சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 27-ந்தேதி கலெக்டர் அலுவலகத்தில் நடத்தப்பட உள்ளது.
- நெல்லை மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர்கள், அவரை சார்ந்தோர்கள் தங்களுக்கு குறைகள் இருப்பின் தெரிவிக்கலாம்.
நெல்லை:
நெல்லை மாவட்ட முன்னாள் படைவீரர்கள், படைவீரர்களை சார்ந்தோர்கள் நலனை கருத்தில் கொண்டு முன்னாள் படைவீரர் சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 27-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடத்தப்பட உள்ளது.
எனவே நெல்லை மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர்கள், அவரை சார்ந்தோர்கள் தங்களுக்கு குறைகள் இருப்பின் மாவட்ட கலெக்டரால் நடத்தப்படும் இச்சிறப்பு முன்னாள் படைவீரர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தங்களது அசல் படை விலகல் சான்று மற்றும் அடையாள அட்டையுடன் கலந்து கொண்டு தங்களது குறைகளை இரட்டை பிரதியில் விண்ணப்பம் மூலம் தெரிவித்து பயனடையுமாறு மாவட்ட கலெக்டர் விஷ்ணு தெரிவித்துள்ளார்.
Next Story
×
X