என் மலர்
உள்ளூர் செய்திகள்
X
சிவராத்திரியையொட்டி அம்பை சிவாலயங்களில் சிறப்பு பூஜைகள்
Byமாலை மலர்19 Feb 2023 2:51 PM IST
- மகா சிவராத்திரியை முன்னிட்டு அம்பாசமுத்திரம் பிரம்மதேசம் உள்ளிட்ட இடங்களில் உள்ள சிவாலயங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
- சிவராத்திரி பூஜைகள் இன்று அதிகாலை வரை நடந்தது.
கல்லிடைக்குறிச்சி:
மகா சிவராத்திரியை முன்னிட்டு நெல்லை மாவட்டத்தில் உள்ள பாபநாசம், அம்பாசமுத்திரம் பிரம்மதேசம் உள்ளிட்ட இடங்களில் உள்ள சிவாலயங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. கல்லிடைக்குறிச்சி மானேந்தியப்பர் மற்றும் வடிவாம்பிகை அம்பாள் கோவில் மகா சிவராத்திரி பூஜை வெகு விமர்சையாக நடைபெற்றது.
இதனை முன்னிட்டு நேற்று மாலை 6 மணிக்கு தொடங்கி, இன்று அதிகாலை வரை சிவன் கோவில்களில் சிவராத்திரி பூஜைகள் நடந்தது. இதற்காக பக்தர்கள் இரவு முழுவதும் சிவாலயங்களில் இருந்து விடிய, விடிய நடந்த 4 கால பூஜைகளில் கலந்து கொண்டனர்.
Next Story
×
X