என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மதுக்கூரில், ரம்ஜானை முன்னிட்டு சிறப்பு தொழுகை
    X

    மதுக்கூரில் ரம்ஜானை முன்னிட்டு சிறப்பு தொழுகை நடந்தது.

    மதுக்கூரில், ரம்ஜானை முன்னிட்டு சிறப்பு தொழுகை

    • நாட்டு நலனுக்காகவும், உலக அமைதி வேண்டியும், சமத்துவம் வேண்டியும் தொழுகையில் ஈடுபட்டனர்.
    • ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

    மதுக்கூர்:

    இன்று ரம்ஜான் பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக பட்டுக்கோட்டை அடுத்த மதுக்கூர் கீற்று சந்தை அருகில் உள்ள திடலில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் இன்று காலை சிறப்பு தொழுகை நடைபெற்றது.

    இதில் ஏராளமான முஸ்லீம்கள் நாட்டு நலனுக்காகவும், உலக அமைதி வேண்டியும், சமத்துவம் வேண்டியும் தொழுகையில் ஈடுபட்டனர்.

    இதனை அடுத்து தொழுகையில் ஈடுபட்டவர்கள் ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

    இதில் பெண்கள் உட்பட சுமார் 1500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    முடிவில் ஹாஜா ஜியாவுதின் மார்க்க பயான் தொழுகையுடன் நிறைவு பெற்றது.

    Next Story
    ×