search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாதா ஆலய திருவிழாவையொட்டி வேளாங்கண்ணி-நாகர்கோவில் இடையே சிறப்பு ரெயில்
    X

    மாதா ஆலய திருவிழாவையொட்டி வேளாங்கண்ணி-நாகர்கோவில் இடையே சிறப்பு ரெயில்

    • வருகிற ஆகஸ்டு மாதம் 5-ந்தேதி முதல் வருகிற 30-9-2023 வரை உள்ள சனிக்கிழமை தோறும் இயக்கப்படும்
    • அதிகாலை 5.45 மணிக்கு வேளாங்கண்ணியில் இருந்து புறப்பட்டு அன்று மாலை 4.45 மணிக்கு நாகர்கோவில் செல்கிறது

    தஞ்சாவூர்:

    ரெயில்வே துறை சார்பில் பண்டிகை மற்றும் திருவிழாக்களையொட்டி சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுவது வழக்கம்.

    அதன்படி வேளாங்கண்ணி மாதா ஆலய திருவிழாவையொட்டி பொதுமக்களின் நலன் கருதி நாகர்கோவிலில் இருந்து வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரெயில் (எண்-06037) இயக்கப்பட உள்ளதாக தென்னக ரெயில்வே அறிவித்துள்ளது.

    இந்த ரெயில் வருகிற ஆகஸ்டு மாதம் 5-ந்தேதி முதல் வருகிற 30-9-2023 வரை உள்ள சனிக்கிழமை தோறும் இயக்கப்படும்.

    நாகர்கோவிலில் இருந்து மதியம் 1.20 மணிக்கு புறப்பட்டு இரவு 11.40 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும்.

    மறு மார்க்கத்தில் இந்த ரெயில் (எண்-06038) ஆகஸ்ட் மாதம் 6-ந் தேதி முதல் அக்டோபர் மாதம் 1-ந் தேதி வரை உள்ள ஞாயிற்றுக்கிழமை தோறும் அதிகாலை 5.45 மணிக்கு வேளாங்கண்ணியில் இருந்து புறப்பட்டு அன்று மாலை 4.45 மணிக்கு நாகர்கோவில் செல்கிறது.

    இந்த ரெயில்கள் இருமார்க்கத்திலும் வள்ளியூர், திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூா், நீடாமங்கலம், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய நிறுத்தங்களில் நின்று செல்லும். இந்த ரெயிலில் ஏசி, படுக்கை வசதிகள் உள்பட 20 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.

    Next Story
    ×