search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தஞ்சை மாவட்டத்தில் இன்று எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு தொடங்கியது
    X

    தஞ்சையில் இன்று நடைபெற்ற எஸ்.எஸ்.எல்.சி. அரசு பொதுத்தேர்வை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    தஞ்சை மாவட்டத்தில் இன்று எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு தொடங்கியது

    • தமிழ்நாட்டில் 22-2023- ம் கல்வி ஆண்டிற்கான எஸ்.எஸ்.எல்.சி. அரசுப் பொதுத்தேர்வு இன்று தொடங்கியது.
    • தஞ்சாவூர் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வினை 409 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் எழுதினர்.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாட்டில் 2022-2023- ம் கல்வி ஆண்டிற்கான எஸ்.எஸ்.எல்.சி. அரசுப் பொதுத்தேர்வு இன்று தொடங்கியது. வருகிற 20-ம் தேதி வரை தேர்வு நடைபெற உள்ளது.

    தஞ்சாவூர் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வினை 409 பள்ளிகளைச் சேர்ந்த 15641 மாணவர்கள், 15474 மாணவிகள் என மொத்தம் 31115 மாணவ-மாணவியரும், 865 தனித்தேர்வர்களும் தேர்வுக்கு விண்ணப்பித்து ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்திருந்தனர்.

    இதில் 452 மாற்று திறனாளி மாணவர்களும் அடங்கும்.

    மாவட்டத்தில் மொத்தம் 136 மையங்களில் தேர்வு நடைபெற்றது.

    காலையிலேயே தேர்வு மையத்துக்கு மாணவ-மாணவிகள் வநதனர்.

    பலர் அவரவர் வழிபாட்டு தலங்களில் நன்றாக தேர்வு எழுதி நல்ல மதிப்பெண் பெற வேண்டும் என்று பிரார்த்தனை செய்தனர். மேலும பெற்றோரிடம் ஆசி வாங்கினர்.

    தேர்வு மையத்துக்குள் செல்போன், காலகுலேட்டர் கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை.

    கடும் சோதனை செய்யப்பட்ட பிறகே மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

    காலை 10 மணிக்கு தேர்வு தொடங்கியது.

    மதியம் 1.15 மணி வரை தேர்வு நடைபெற்றது.

    மாற்றுதிறனாளி மாணவர்கள் எழுத வசதியாக தரைதளத்தில் தேர்வு அறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    தேர்வுப் பணியில் 136 தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள், 136 துறை அலுவலர்கள், 8 வினாத்தாள் கட்டுகாப்பாளர்கள், 28 வழித்தட அலுவலர்கள் 195 நிலையான பறக்கும் படை உறுப்பினர்கள் 1872 அறைக்க ண்காணிப்பாளர்கள், 399 சொல்வதை எழுதுபவர்கள், 272 அலுவலகப் பணியாளர்கள் ஈடுபட்டனர்.

    தேர்வு மையங்களில் குடிநீர் வசதி, இருக்கை, மின்சாரம், காற்றோட்டம், வெளிச்சம், மற்றும் கழிப்பிட வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

    இது தவிரதேர்வு மையங்கள் அமைந்துள்ள பகுதியில் தடையில்லா மின்சார வசதி ஏற்படுத்தியும், தேர்வு மைய வழித்தடங்களில் மாணவர்கள் சிரமமின்றி செல்வதற்கு வசதியாக பஸ்கள் இயக்கபட்டன.

    Next Story
    ×