என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கடலூரில் மாநில, மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டி:வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கலெக்டர், எம்.எல்.ஏ, மேயர் பரிசு வழங்கினர்
- 1,358 மாணவ மாணவிகள் முதல் 3 இடங்களில் வெற்றி பெற்றனர்.
- 35 மாணவ, மாணவிகள் வெற்றி பெற்று சாதனை படைத்தனர்.
கடலூர்:
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி துறை மூலமாக 2022-23-ம் கல்வியாண்டில் அனைத்து அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவ- மாணவி களுக்காக கலைத்திருவிழா போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் 77 ஆயிரத்து 339 மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் தேர்வு செய்யப்பட்ட 41 ஆயிரத்து 413 மாணவர்களுக்கு வட்டார அளவில் போட்டி நடத்தி, அதில் முதல் 2 இடங்களை பெற்ற மாணவ-மாணவிகளுக்கு மட்டும் மாவட்ட அளவில் 6.12.2022 முதல் 10.12.2022 வரை போட்டி நடத்தப்பட்டது. இந்த போட்டிகளில் 6,952 மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் 1,358 மாணவ மாணவிகள் முதல் 3 இடங்களில் வெற்றி பெற்றனர். இதையடுத்து மாவட்ட அளவில் முதலிடத்தை பெற்ற மாணவ- மாணவிகளில் 491 பேர் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டனர். அதில் 35 மாணவ, மாணவிகள் வெற்றி பெற்று சாதனை படைத்தனர்.
இதையடுத்து மாநில மற்றும் மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டிகளில் வெற்றி பெற்ற கடலூர் மாவட்ட மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி கடலூரில் உள்ள அரசு உதவி பெறும் பெண்கள் பள்ளியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் அருண் தம்புராஜ், அய்யப்பன் எம்.எல்.ஏ., மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, துணை மேயர் தாமரைச்செல்வன் ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினர். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமகிருஷ்ணன் வரவேற்றார். இதில் ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி உதவி திட்ட அலுவலர் சரவணகுமார் நன்றி கூறினார்.