search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாநில அளவிலான கபடி போட்டி- நெல்லை வக்கீல் சங்க அணி முதலிடம் பிடித்தது
    X

    நெல்லை மாவட்ட வக்கீல் சங்க அணிக்கு பரிசு கோப்பை வழங்கப்பட்டது.

    மாநில அளவிலான கபடி போட்டி- நெல்லை வக்கீல் சங்க அணி முதலிடம் பிடித்தது

    • போட்டியில் 36 மாவட்டத்தை சேர்ந்த வக்கீல்கள் தனித்தனி அணிகளாக பிரிந்து விளையாடினர்.
    • சென்னை உயர்நீதிமன்ற அணி 2-வது பரிசாக ரூ.60 ஆயிரம், கோப்பையை வென்றது.

    நெல்லை:

    மாநில அளவிலான வக்கீல்கள் இடையேயான கபடி போட்டி தூத்துக்குடி தருவைகுளம் மைதானத்தில் நடந்தது. இதில் 36 மாவட்டத்தை சேர்ந்த வக்கீல்கள் தனித்தனி அணிகளாக பிரிந்து விளையாடினர். இந்த போட்டிகளில் நெல்லை மாவட்ட வக்கீல்கள் சங்க அணி முதல் பரிசு ரூ.75 ஆயிரத்தையும், கோப்பையையும் தட்டிச்சென்றது. சென்னை உயர்நீதிமன்ற அணி 2-வது பரிசாக ரூ.60 ஆயிரம் மற்றும் கோப்பையும், தூத்துக்குடி அணி 3-வது பரிசாக ரூ.45 ஆயிரமும் பெற்றன. விழாவில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் மற்றும் கோப்பைகளை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுந்தர் மற்றும் தூத்துக்குடி மாவட்ட நீதிபதி செல்வம், தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், தமிழ்நாடு-புதுச்சேரி பார் கவுன்சில் சேர்மன் அமல் ராஜ், துணைத்தலைவர் வேலு கார்த்திகேயன் ஆகியோர் கலந்து கொண்டு வழங்கினர்.

    இதற்கான ஏற்பாடுகளை பார் கவுன்சில் உறுப்பினர் மைக்கேல் ஸ்டேனிஷ் பிரபு, தூத்துக்குடி மாவட்ட வக்கீல்கள் சங்க தலைவர் செங்குட்டுவன் ஆகியோர் செய்திருந்தனர். இதில் நெல்லை வக்கீல்கள் சங்க தலைவர் ராஜேஸ்வரன், செயலாளர் மணிகண்டன், மூத்த வக்கீல் பாலகணேசன், செந்தில்குமார், பொருளாளர் ராஜா, உதவி செயலாளர் சிதம்பரம், நூலகர் இசக்கி பாண்டியன் மற்றும் வக்கீல்கள் லட்சு மணன் ரமேஷ், மகேஷ், மகாராஜன், முத்துராஜ், கதிரவன், அனந்த கிருஷ்ணன், எட்வின் துரை ஆகியோர் பங்கேற்றனர்.

    Next Story
    ×