search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிவகிரி பகுதியில் சீராக குடிநீர் வழங்க  நடவடிக்கை எடுக்க வேண்டும் - சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
    X

    தண்ணீர் கிடைக்கும் கிணற்றை பேரூராட்சிமன்ற தலைவர் கோமதிசங்கரி சுந்தரவடிவேலு, துணைத் தலைவர் லட்சுமிராமன், செயல் அலுவலர் வெங்கடகோபு, கவுன்சிலர்கள் ஆய்வு செய்த காட்சி.

    சிவகிரி பகுதியில் சீராக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

    • மேற்கு தொடர்ச்சி மலை அடிவார கோம்பை ஆற்றுப்பகுதியில் பல்வேறு காலகட்டங்களில் போடப்பட்ட 5 கிணறுகள் மூலமாக பொதுமக்களுக்கு குடிநீர் வசதி செய்யப்பட்டு வருகிறது.
    • தற்போது கடுமையான வெயில் காரணமாக 2 கிணறுகளிலும் தண்ணீர் வேகமாக வற்றிவிட்டது.

    சிவகிரி:

    தென்காசி மாவட்டத்தின் வடக்கு எல்லையான சிவகிரி தாலுகா தலைநகர மாகவும், நீதிமன்றம், தாலுகா அலுவலகம், தாலுகா மருத்துவமனை, கருவூலம், பொதுப்ப ணித்துறை அலுவலகம் உள்பட அனைத்து அரசு துறை அலுவலகம் உள்ள சிவகிரி பேரூராட்சி வடக்குசத்திரம், தருமபுரி, கொத்தாடப்பட்டி, சிவரா மலிங்கபுரம், குமாரபுரம் உட்பட 18 வார்டுகளைக கொண்டதாகும். சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

    5 கிணறுகள்

    மேற்கு தொடர்ச்சி மலை அடிவார கோம்பை ஆற்றுப்பகுதியில் பல்வேறு காலகட்டங்களில் போடப்பட்ட 5 கிணறுகள் மூலமாக பொதுமக்களுக்கு குடிநீர் வசதி செய்யப்பட்டு வந்த நிலையில் கோடை காலமாக விளங்குவதால் ஏற்கனவே போடப்பட்டுள்ள 5 கிணறுகளில் 2 கிணறுகள் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளதால் பயன்படுத்த முடியாத அளவுக்கு உள்ளது. 4-வது கிணற்றில் தண்ணீர் ஊற்று மிகவும் குறைந்த நிலையில் உள்ளது. மீதி உள்ள 2 கிணறுகள் மூலமாக தண்ணீர் குழாய்கள் மூலமாக கொண்டு வரப்பட்டு ஊரில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் தேக்கி வைத்து குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.

    தற்போது கடுமையாக வெயில் காரணமாக 2 கிணறுகளிலும் தண்ணீர் வேகமாக வற்றிவிட்டது. இதனால் தண்ணீர் கலங்க லாக விநியோகம் செய்ய ப்பட்டு வருவதாக பொது மக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

    பேரூராட்சிமன்ற தலைவர் ஆய்வு

    சிவகிரி பேரூராட்சிமன்ற தலைவர் கோமதி சங்கரி சுந்தரவடிவேலு, துணைத் தலைவர் லட்சுமிராமன், பேரூராட்சி செயல் அலுவலர் வெங்கடகோபு, கவுன்சிலர்கள் ஆகியோர் குடிநீர் கிணறுகள் உள்ள கோம்பை பகுதியில் சென்று கிணறுகளை ஆய்வு செய்தனர். நீர் விநியோகம் செய்வத ற்கான ஏற்பாடு களை செய்யப்பட்டு ள்ளதாகவும், அனைவருக்கும் போதுமான அளவு தண்ணீர் கிடைக்க வேண்டுமென்றால் பழுதாகி உள்ள 3 கிணறுக ளையும் சீரமைக்க வேண்டும். ஆனால் போதுமான நிதி இல்லாத நிலை ஏற்பட்டு ள்ளது. தண்ணீர் பிரச்சனை யை தீர்ப்பதற்கு தற்போது லாரி மூலமாக தண்ணீர் விநியோ கிக்கப்பட்டு வருகிறது என கூறினார்.

    எனினும் இப்பகுதி மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்கு கிணறுகளை சீர்படுத்தி ஆழப்படுத்தி அனைவருக்கும் குடிநீர் கிடைப்பதற்கு வேண்டிய நிதி உதவியை மாவட்ட நிர்வாகம் கொடுக்க வே ண்டும் என இப்பகுதி பொது மக்கள், சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×