search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை மாவட்ட விற்பனையாளர்கள் உரங்களை மற்ற இடுபொருட்களுடன் இணைத்து விற்றால் கடும் நடவடிக்கை -   வேளாண்மை இணை இயக்குனர் எச்சரிக்கை
    X

    நெல்லை மாவட்ட விற்பனையாளர்கள் உரங்களை மற்ற இடுபொருட்களுடன் இணைத்து விற்றால் கடும் நடவடிக்கை - வேளாண்மை இணை இயக்குனர் எச்சரிக்கை

    • நெல்லை மாவட்டத்தில் தற்போது பிசான சாகுபடி பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
    • உரங்களுடன் வேறு சில இடுபொருட்களை இணைத்து விவசாயிகளுக்கு வழங்கக்கூடாது என வேளாண்மை இணை இயக்குனர் கூறியுள்ளார்.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் முருகானந்தம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நெல்லை மாவட்டத்தில் தற்போது பிசான சாகுபடி பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பிசான சாகுபடிக்கு தேவையான உரங்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டு சில்லரை உர விற்பனையாளர்கள், உரக்கட்டுப்பாட்டு ஆணைப்படி மானிய விலை உரங்களை விற்பனை முனையக் கருவியின் மூலம் விற்பனை செய்ய வேண்டும். உரங்களின் இருப்பு மற்றும் விலை விபரங்கள் அடங்கிய தகவல் பலகை தவறாமல் விவசாயிகளின் பார்வையில் படும்படி பராமரிக்கப்பட வேண்டும்.

    விற்பனை முனை கருவியில் உள்ள இருப்பும், உண்மை இருப்பும் சரியாக இருக்குமாறு உர இருப்பினை பராமரித்திட வேண்டும். விவசாயிகளின் தேவைக்கு அதிகமாகவும், ஒரே நபருக்கு அதிகளவு உரமும் வழங்கக்கூடாது. குறிப்பிட்ட விவசாயியின் பெயரில் அதிகபடியான உர விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் சில்லரை விற்பனை உரிமம் ரத்து செய்யப்படும்.

    உர மூட்டைகளில் குறிப்பிட்டுள்ள அதிகபட்ச விலைக்கு மிகாமல் உரங்களை விற்பனை செய்ய வேண்டும். விவசாயிகளுக்கு தேவையான உரங்களுடன் வேறு சில இடுபொருட்களை இணைத்து கட்டாயப்படுத்தி விவசாயிகளுக்கு வழங்கக்கூடாது. மொத்த உர விற்பனை–யாளர்கள், வெளி மாவட்டங்களுக்கு மானிய உரங்களை அனுப்புவதோ, வெளி மாவட்டங்களிலிருந்து கொள்முதல் செய்வதோ கூடாது. சில்லரை உர விற்பனையாளர்களுக்கு அனுப்பும் உரிய ஆவணத்துடன் உரங்களை வாகனங்களில் அனுப்ப வேண்டும்.

    உர விற்பனையாளர்கள் உர உரிமத்தில் அனுமதி பெறாத இடங்களில் உரத்தினை இருப்பு வைப்பதும், உரிமத்தில் அனுமதி பெறாத நிறுவங்களின் உரங்களை கொள்முதல் செய்வதும் கூடாது. விவசாயம் மேற்கொள்ளாத நபர்களுக்கு உரம் விற்பனை செய்யக்கூடாது. எனவே, திடீர் ஆய்வின் போது மேற்கானும் குறைபாடுகள் கண்டறியப்பட்டால் உர விற்பனையாளர்களின் உர விற்பனை உரிமம் உரக்க ட்டுப்பாட்டு ஆணை 1985-ன்படி ரத்து செய்யப்படும் என எச்சரிக்கை விடுவிக்கப்படுகிறது.

    மேலும் உரங்களுடன் வேறு இடுபொருட்களை இணைத்து விற்பனை செய்தாலோ அல்லது உர மூட்டையின் மேல் அச்சிடப்பட்ட அதிகபட்ச விற்பனை விலைக்கு மேல் விற்பனை செய்யப்பட்டாலோ சம்பந்தப்பட்ட அலுவ லர்களை தொடர்பு கொண்டு புகார் அளிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    Next Story
    ×