search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அம்பையில்  தனியார் பஸ் படிக்கட்டுகளில்  தொங்கிய படி செல்லும் மாணவர்கள்  - நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
    X

    பஸ் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் செய்த மாணவர்கள்.

    அம்பையில் தனியார் பஸ் படிக்கட்டுகளில் தொங்கிய படி செல்லும் மாணவர்கள் - நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

    • அம்பையில் இருந்து பாபநாசத்திற்கு போதிய அளவு அரசு பஸ்கள் இல்லாத காரணத்தால் ஏராளமான தனியார் மினி பஸ்கள் இயங்கி வருகின்றன.
    • இந்த பஸ்களில் அனுமதிக்கப்பட்ட அளவினை விட அதிகளவிலான மாணவர்களை ஏற்றி செல்கின்றனர்.

    கல்லிடைக்குறிச்சி:

    அம்பை ம்றறும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பாபநாசத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

    இருப்பினும் அம்பையில் இருந்து பாபநாசத்திற்கு போதிய அளவு அரசு பஸ்கள் இல்லாத காரணத்தால் ஏராளமான தனியார் மினி பஸ்கள் இயங்கி வருகின்றன.

    இந்த பஸ்களில் அனுமதிக்கப்பட்ட அளவினை விட அதிகளவிலான மாணவர்களை ஏற்றி செல்கின்றனர்.

    பஸ்சின் உள்ளே மாணவர்கள் நின்று செல்லும் நிலையில், முன், பின் படிக்கட்டுகளிலும் சுமார் 20 -க்கும் மேற்பட்ட மாணவர்கள் தொங்கிய படி பயணம் செய்கின்றனர்.

    இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், மாணவர்களின் புத்தக பைகளை டிரைவரே வாங்கி வைத்து கொள்கிறார். அதனால் கண்டிரக்டர், டிரைவர் உதவியுடனே இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுகிறது.

    எனவே அசம்பாவித சம்பவங்கள் நடைபெறும் முன்பு சம்பந்தப்பட்ட அம்பை வட்டார போக்குவரத்து ஆய்வாளர் மற்றும் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.

    Next Story
    ×