search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பளுதூக்குதல் போட்டிக்கு மாணவர்கள் தேர்வு
    X

    பளுதூக்குதல் பயிற்சிக்கு தேர்வான மாணவ- மாணவிகள்.

    பளுதூக்குதல் போட்டிக்கு மாணவர்கள் தேர்வு

    • 400-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் பயிற்சியில் கலந்து கொண்டனர்.
    • பளுதூக்குதலில் பதக்கம் வென்ற சிவா பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    சீர்காழி:

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் இந்தியா மாவட்ட விளையாட்டு மையம் திட்டத்தின் கீழ், மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சபாநாயக முதலியார் இந்து மேல்நிலைப்பள்ளியை மயிலாடுதுறை வருவாய் மாவட்ட மையமாக தேர்ந்தெடுக்கப்பட்டதன் அடிப்படையில், மாவட்ட ஆட்சியரின் அழைப்பினை ஏற்று சீர்காழி நகரம் மற்றும் சீர்காழி சுற்றியுள்ள கிராம பகுதிகளில் இருந்தும் ஆக்கூர் மற்றும் வைத்தீஸ்வரன்கோயில் போன்ற பகுதிகளில் இருந்தும் 400க்கு மேற்பட்ட 6 முதல் 11 வகுப்பு வரையுள்ள மாணவ மாணவிகள் பளுதூக்குதல் பயிற்சியில் பங்குப்பெற கலந்து கொண்டனர்.

    அதிலிருந்து 50 மாணவர்கள், 50 மாணவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    இவர்களுக்கு தினசரி காலை 6 மணி முதல் 8மணி வரையிலும் மாலை 4.30 மணி முதல் 6.30 வரை பயிற்சியளிக்க தமிழ்நாடு மேம்பாட்டு ஆணையத்தால் திட்டமிடப்பட்டுள்ளது.

    இப்பயிற்சிக்காக அகில இந்திய பளுதூக்குதலில் பதக்கம் வென்ற சிவா பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமையாசிரியர் எஸ். அறிவுடைநம்பி தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக மாவட்ட விளையாட்டு அலுவலர் அப்துலாஷா பங்கேற்று முகாம் விதிகளை பற்றியும் பயிற்சி முறைகளை பற்றியும் விளக்கினார்.

    மேலும் ஆக்கூர் ஓரியண்டல் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் ஷாஜகான், வைத்தீஸ்வரன் கோயில் அரசு மேல்நிலைப்பள்ளியின் உடற்கல்வி இயக்குனர் ஷங்கர், மற்றும் ஆசிரியர் ராதாகிருஷ்ணன், எஸ். டி. ஏ. டி அலுவலகர் ஏ.பிருந்தா, எம். விக்னேஷ் கலந்து கொண்டனர்.

    இந்நிகழ்ச்சியின் தேர்வாளர்களாக பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர்கள் டி. முரளி, பி. மார்கண்டன், எஸ். சக்தி வேல், ச.ஹரிஹரன், ரா. ராகேஷ் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

    நிறைவாக, பள்ளியின் உடற்கல்வி இயக்குநர் எஸ். முரளிதரன் நன்றி கூறினார்.

    Next Story
    ×