search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடலூர் அருகே பெண் சப்-இன்ஸ்பெக்டர் தற்கொலை முயற்சி:ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை
    X

    கடலூர் அருகே பெண் சப்-இன்ஸ்பெக்டர் தற்கொலை முயற்சி:ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை

    • நெல்லிக்குப்பத்தில் சுகன்யா என்பவர் சப்-இன்ஸ்பெக்டராக பணி செய்து வருகிறார்.
    • போலீஸ் பயிற்சி பள்ளிக்கு தற்காலிக பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தில் போலீஸ் நிலையம் உள்ளது. இங்கு சுகன்யா என்பவர் சப்-இன்ஸ்பெக்டராக பணி செய்து வருகிறார்.வழக்கம் போல இன்று காலையில் அவர் பணிக்கு வந்தார். சிறிது நேரத்தில் மயங்கிய நிலையில் காணப்பட்டார். அங்கு பணியில் இருந்த போலீசார் அவரிடம் விசாரித்த போது, தான் தூக்க மாத்திரை அதிகளவில் விழுங்கியதாக கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் அவரை மீட்டு புதுவை தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நெல்லிக்குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுகன்யா தூக்க மாத்திரையை ஏன் விழுங்கினார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    இதில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் சப்-இன்ஸ்பெக்டர் சுகன்யா விழுப்புரம் போலீஸ் பயிற்சி பள்ளிக்கு தற்காலிக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதனால் மனஉளைச்சல் அடைந்த சப்-இன்ஸ்பெக்டர் சுகன்யா தூக்க மாத்திரை விழுங்கி தற்கொலை முயற்சி செய்ததும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இது தொடர்பாக கடலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தொடர் விசாரணை நடந்து வருகிறது. நெல்லிக்குப்பம் போலீஸ் நிலையத்தில் பணியில் இருந்த போதே பெண் சப்-இன்ஸ்பெக்டர் தூக்க மாத்திரை விழுங்கி தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×